12899 – அண்ணாமலை அருள்விளக்கு.

ஸ்ரீ ரமண அடியார் குழு. இலங்கை: பகவான் ஸ்ரீரமண மகரிஷிகள் நூற்றாண்டு விழா வெளியீடு, 1வது பதிப்பு, மார்ச் 1980. (கொழும்பு: ராஜா பிரஸ், 92, பாமங்கடை வீதி).

(20) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18 x 12.5 சமீ.

ரமண மஹரிஷி (டிசம்பர் 30, 1879 – ஏப்ரல் 14, 1950) தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி யாவார். அத்வைத வேதாந்த நெறியை போதித்த இவர் திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். இவர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் 1879ம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாள் சுந்தரம் ஐயர், அழகம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு நாகசுவாமி என்கிற மூத்த சகோதர் உண்டு. இவரது இயற்பெயர் வேங்கடராமன். இவர் மதுரையில் ஸ்காட் நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். ரமணரின் முக்கியமான உபதேசம் ‘நான் யார்’ என்னும் ஆன்ம விசாரம். ஞான மார்க்கத்தில் தன்னை அறிதல் அல்லது முக்தி பெறுதலே இவ்வழியின் நோக்கம். உபநிடதங்கள் மற்றும் அத்வைத வேதாந்த நெறிகள் ஆகியவற்றின் சாரத்தினை இவரது உபதேசங்களில் காணலாம். இவரது உபதேசங்களின் தொகுப்பான ‘நான் யார்?’ என்ற நூல் முதன்மையானதாகும். ஆதி சங்கரரின் ஆக்கமான ‘ஆத்ம போதம்’ ரமணரால் தமிழில் வெண்பாக்களாக ஆக்கப்பட்டது. பலகாலம் திருவண்ணாமலையின் பல இடங்களில் தங்கிய ரமண மகரிஷி, 1922 இல் அவரது தாயின் மறைவிற்குப் பிறகு திருவண்ணாமலையின் அடிவாரத்தில் குடிபுகுந்தார். அங்கு அவரது சீடர்களால் ஆசிரமம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதுவே ரமண ஆசிரமமாகும். இதன் பின்னர் அவர் சமாதியடையும் வரை அந்த ஆசிரமத்தை விட்டு எங்கும் செல்லவில்லை. இந் நூல் ரமணமகரிஷின் நினைவஞ்சலியாக வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 235 PAM).

ஏனைய பதிவுகள்

9 Better Dogecoin Casinos 2024

Posts Log in to your own Dogecoin casino membership All of our Finest On the internet Dogecoin Local casino Internet sites You can get 100