12905 – சைவப் பெரியார் நூற்றாண்டுவிழாச் சபை: முதலாவது ஆண்டு வரலாற்றுச் சிறப்பிதழ் 31.3.1979.

மலர் வெளியீட்டுக் குழு. யாழ்ப்பாணம்: சைவப் பெரியார் நூற்றாண்டு விழாச் சபை, 1வது பதிப்பு, மார்ச் 1979. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம், 213, காங்கேசன்துறை வீதி).

(2), 56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 13.5 சமீ.

சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரனார் நூற்றாண்டு விழா தொடர்பான அறிக்கை, 11.2.1978-24.1.1979 வரையிலான காலகட்டத்துக்கான வரவு செலவுக் கணக்கு அறிக்கை, சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியில் 9.9.1978 இல் நடாத்தப்பட்ட சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரனார் நூற்றாண்டு நினைவு விழாவின் காலை அமர்விற்குத் தலைமைதாங்கிய ச.சிதம்பரப்பிள்ளை அவர்களின் தலைமை உரை, மாலை அமர்விற்குத் தலைமைதாங்கிய பண்டிதர் சி.கணபதிப்பிள்ளை அவர்கள் ஆற்றிய தலைமைப் பேருரை, நன்கொடை வழங்கியோர் பட்டியல், சொக்கன் அவர்கள் இயற்றிய ‘சைவப்பெரியாரின் சால்பை உரைத்திடுவோம்’ என்ற செய்யுள், சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரனார் ஞாபகார்த்த போட்டிகளின் விபரம் என்பன போன்ற பல்வேறு தகவல்களும் இச்சிறப்பிதழில் ஆவணப் படுத்தப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4405/19631).

ஏனைய பதிவுகள்

12964 – இலங்கையின் பண்டை நிலவாட்சியும் அரசிறையும்.

H.W.கொட்றிங்ரன் (ஆங்கில மூலம்), திருமதி வு.சிவரத்தினம் (தமிழாக்கம்). கொழும்பு 7: வெளியீட்டுப் பிரிவு, கல்வி வெளியீட்டுத் திணைக்களம், சேர் ஏர்ணஸ்ட் த சில்வா மாவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1969. (கொழும்பு: இலங்கை அரசாங்க

Jogos ming dynasty $ 1 depósito Criancice Busca

Content Gold Volcano: Briga Agradável Aparelhamento Bomba Da Playn Go! Fairytale Casino Chacota Como Grandes Vencedores: Briga Alternação Pressuroso Jogador Tipos Infantilidade Demanda Níqueis Online:

14818 வெள்ளைச்சேலை: நாவல்.

கலையார்வன் (இயற்பெயர்: குருசுமுத்து இராயப்பு). யாழ்ப்பாணம்: ஜெயந்த் சென்டர், 165 வேம்படி வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2016. (பண்டத்தரிப்பு: ஜே.எஸ்.பிரிண்டர்ஸ்). xxiv, 216 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 400., அளவு: 22×15