12906 – நல்லை ஆதீன முதல்வர் நற்சரிதம்.

இராசையா ஸ்ரீதரன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம், நல்லூர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(16), 42 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22 x 18 சமீ.

சைவத்துக்கே தன்னை அர்ப்பணித்து தமிழ்த் தொண்டாற்றிய பெரியார் நல்லை திருஞான சம்பந்தர் ஆதீன ஸ்தாபகர் நல்லைக் குருமணி ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்களின் வாழ்க்கைச் சரிதத்தை நூல்வடிவில் தொகுத்துத் தந்துள்ளார். மணி பகவதராக இருந்து கதாப்பிரசங்கம் செய்து காலம் கழித்த சுவாமிகளின் இளமைக்கால கடின உழைப்பும், இந்தியாவில் அவர் பெற்ற துறவுநிலை என்பனவும் விரிவாகப் பதியப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47428).

ஏனைய பதிவுகள்

12417 – சிவசக்தி 1967-1968: றோயல் ; கல்லூரி இந்து மாணவர் ; மன்ற ஆண்டுமலர் .

சு.சு.நவரட்ணம், மு. ஓம்பிரசாதம் (ஆசிரியர் குழு). கொழும்பு 7: இந்து மாணவர்மன்றம், றோயல் கல்லூரி, 1வது பதிப்பு, 1968. (கொழும்பு 2: அரசன் அச்சகம்) (24), 48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18

12295 – கல்வி அகராதி.

சபா ஜெயராஜா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்). ix, 112 பக்கம், விலை: ரூபா 260., அளவு: 19×12 சமீ.,