12909 – விபுலானந்த அடிகளார் நூற்றாண்டு விழா மலர்: 20.07.1991.

மலர்க்குழு. கனடா: வே.கணேஸ்வரன், தலைவர், தமிழ் முருகன் கோவில் சபை, 1வது பதிப்பு, ஜுலை 1991. (கனடா: ரிப்ளெக்ஸ் அச்சகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9).

68 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28 x 21 சமீ.

கனடாவில் 1989 திருக்கார்த்திகையின்போது அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்ட தமிழ் முருகன் கோவில் சபையின் வெளியீடு இது. விபுலானந்த அடிகளாரின் நூற்றாண்டை முன்னிட்டு 20.7.1991 அன்று நடத்திய விழாவின்போது வெளியிடப்பட்டது. ஆசிஉரைகள், விளம்பரங்கள் ஆகியவற்றின் இடையிடையே கீழ்க்கண்ட முக்கிய கட்டுரைகளும் இடம்பெற்றிருக்கின்றன. பேராசிரியர் அமரர் ப.சந்திரசேகரம் அவர்கள் திருநெல்வேலி, ஆடியபாதம் வீதியிலுள்ள ஸ்ரீ இராம கிருஷ்ணாலயத்தில் ஆற்றிய உரை, க.தா.செல்வராஜகோபால் (ஈழத்துப் பூராடனார்) எழுதிய ‘விபுலாநந்த சுவாமியின் முத்தமிழ் வித்தகம்’, வல்வை கமலா பெரியதம்பியின் ‘விபுலானந்தரின் யாழிசை’, மறைந்த கி.லக்ஷ்மண ஐயர் கொழும்பு ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் பொன்விழாவையொட்டி எழுதிய கட்டுரைத் தொடரில் ஒரு பகுதியான ‘இராமகிருஷ்ண மிஷன் வளர்ச்சியில் விபுலாநந்தர் ஆற்றிய பணிகள்’ என்ற கட்டுரை ஆகியன இம்மலரின் பெறுமதியை உயர்த்துகின்றன. கனடா, ரிப்ளெக்ஸ் அச்சகம், இந்நூலை அன்பளிப்பாக வழங்கி யிருந்தது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32143).

மேலும் பார்க்க: 13யு19,12008,12037,

ஏனைய பதிவுகள்

14961 வடிவேல் ஐயா நினைவு மலர்: 05.12.2004.

மலர்க் குழு. திருக்கோணமலை: மலர் வெளியீட்டுக் குழு, பாக்கியபதி, 15, வித்தியாலயம் ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (திருக்கோணமலை: ஸ்ரீ கணேச அச்சகம், 28B புதிய சோனகத் தெரு). 107 பக்கம், தகடுகள்,

14056 வெசாக் சிரிசர 2004.

ராஜா குருப்பு (பதிப்பாசிரியர்), த.கனகரத்தினம் (உதவிப் பதிப்பாசிரியர்). கொழும்பு 7: வெசாக் சிரிசர வெளியீட்டுக் குழு, அரச சேவைகள் பௌத்த சங்கம், 90/15, வீரவ பிளேஸ், றாகம வீதி, கடவத்தை, 1வது பதிப்பு, மே

12784 – சாபமும் சக்கரவர்த்தியும்: நாடகங்கள்.

பாகீரதி கணேசதுரை (புனைபெயர்: மாவை பாரதி). சென்னை 600 094: பூவரசி வெளியீடு, 20/2இ சக்காரியா காலனி, முதலாவது தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, மே 2016. (சென்னை 600 094: பூவரசி வெளியீடு,

14738 அவனுக்குள் ஆயிரம் (நாவல்).

தினேஷ் ஏகாம்பரம். சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2018. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்). x,