14961 வடிவேல் ஐயா நினைவு மலர்: 05.12.2004.

மலர்க் குழு. திருக்கோணமலை: மலர் வெளியீட்டுக் குழு, பாக்கியபதி, 15, வித்தியாலயம் ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (திருக்கோணமலை: ஸ்ரீ கணேச அச்சகம், 28B புதிய சோனகத் தெரு). 107 பக்கம், தகடுகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21ஒ17 சமீ. இந்நூலில் சைவப் புலவர் பண்டிதர் இ.வடிவேல் (09.12.1919-05.11.2004) அவர்களின் பணிகள், ஆலயங்களுக்குப் பாடி வழங்கிய ஊஞ்சல் பாக்கள், கவிதை ஆக்கங்கள், கட்டுரைகள், வடிவேல் ஐயா பெற்ற கௌரவப் பட்டங்கள், இரங்கற்பா, நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவர், கிழக்கில் உதித்த ஞான மலர், சைவப்புலவர் பண்டிதரின் நெஞ்சகலா நினைவலைகள், ஆத்ம சாந்திப் பிரார்த்தனை உரை – பண்டிதர் ஆர் வடிவேல் ஐயா அவர்களின் மறைவையொட்டி எழுதப்பெற்றது தொண்டனுக்குத் தொண்டன் தோழனுக்குத் தோழன், ஆத்ம அஞ்சலி, பணிந்து போற்றுகிறேன், கிழக்கில் உதித்த ஞானமலர் ஞானசிரோன்மணி பண்டிதர் வடிவேல், ஐயா என்றும் எம்முடன் இருப்பார், அமரர் இ.வடிவேலனார். ஆசானுக்கு ஒரு அஞ்சலி. அறிவொளித்தீபம் அணைந்தது, பண்டிதர் வடிவேல் ஐயாவுக்கு ஒரு மடல், திருகோணமலை வாழ் சைவப்பெருமக்களின் மனதில் நீங்கா நினைவு பெற்ற தொண்டன் அமரத்துவம் அடைந்த பண்டிதர் வடிவேல் அவர்கள், ஞானமலர்தன்னை மறந்திடப்போமா?,பண்டிதர் வடிவேலு ஐயாவுக்கு பிரிவுபசாரம் அவரின் ஆத்ம சாந்திக்கு ஓர் விண்ணப்பம், அமரத்துவம் அடைந்த பண்டிதர் ஞானசிரோன்மணி கலாபூஷணம், சைவப்புலவர் இராசையா வடிவேல் ஆசிரியர், திருமலை தந்த திருவிளக்கு, சமயப் பெரியார் தமிழறிஞர் சைவப் புலவர் பண்டிதர் வடிவேல் ஐயா, ஞானசிரோன்மணி பண்டிதர் வடிவேல் ஐயா, சைவப்புலவர் பண்டிதர் இ.வடிவேல், சைவமும், தமிழும், இனிது ஓங்க தன்னலம் கருதாது சேவைபற்றிய உயர் பெரியோன் பண்டிதர் அமரர் வடிவேல் ஐயா, 928 இலக்கிய அறிஞர்கள், புலவர்கள் பண்டிதர் இ.வடிவேல் அவர்கள் ஆக்கிய திருக்கோணேஸ்வரம், தொன்மையும் வண்மையும் என்ற நூலிருந்து, திருக்கோணமலை சிவபூமி, அமரர். ஆர்.வடிவேல் ஐயா அவர்களுக்கு இரங்கற் பா, திருக்குறள் திலகம், வானசிரோன்மணி ஆகிவிட்ட ஞானசிரோன்மணி பண்டிதர் ஆர்.வடிவேல் அவர்கள், அமரத்துவமடைந்த ஞானசிரோன்மணி ஆர்.வடிவேல் ஐயா அவர்கட்கு சமர்ப்பணம், கிழக்கிலங்கைக்கு பெருமை சேர்த்த பெரியார், கிழக்கிலங்கை தந்த சைவத்தமிழ் பெரியார், இலக்கிய வித்தகர் பண்டிதர் வடிவேல் அவர்கள், திருக்கோணமலை பத்திரகாளி அம்பாள், திருப்பள்ளியெழுச்சி, திருக்கோணமலை ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி கோயில், ஸ்ரீ சண்முகப் பெருமான் திருவூஞ்சல், வில்லூன்றிக் கந்தன் தேர்ச் சிந்து, ‘சமூகம் ஒரு நல்ல தொண்டரை இழந்து விட்டது”, ஆசானே! அறிவுச்சுடரே என்றென்றும் ஒளிர்கவே பண்டிதரின் நுண்மான் நுழைபுலம், வடிவேலனார் நாமம் வாழ்க, என்றும் எங்கள் வழிகாட்டி ஆசான் பண்டிதர் இ.வட்வேல், திருக்கோணேசர் திருவூஞ்சற் பதிகம் ஆக்கியோன் சைவப்புலவர் பண்டிதர் இ.வடிவேல் அவர்கள், யான் அறிந்த பெரியார் ஈடுசெய்யமுடியாத இழப்பு, அழியாச் சேவை செய்த அன்னாரின் ஆன்மா முத்தி பெற வேண்டும், கிழக்கில் உதித்த சூரியன், திருமலைக்கு வடிவமைத்த இ.வடிவேல் அவர்கள் அன்னாருக்கு ஓர் அஞ்சலி, கொழும்புத் தமிழ்ச் சங்கம் பண்டிதர் இரா.வடிவேலு குடும்ப அங்கத்தவர்களுக்கு மௌனாஞ்சலி. நின்நாமம் என்றும் நிலைத்திட வேண்டுவமே, எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கு, எம் சின்னையா பரணி போற்றும் திருவேலன், என்நன்றி கொன்றார்கும், சின்னையாவின் அழியாத நினைவுகள், அன்பு செலுத்திய எங்கள் சின்னையா, எங்கள் துருவ நட்சத்திரம் ஆகிய தலைப்புகளில் அன்பர்கள், உறவினர்களின் அஞ்சலி உரைகளை உள்ளடக்கியதாக இம்மலர் வெளியிடப் பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34830).

ஏனைய பதிவுகள்

12458 – கமலமலர்: பவளவிழா சிறப்பு மலர் 2011.

ஆ.பேரின்பநாதன் (மலராசிரியர்). யாழ்ப்பாணம்: பவளவிழா மலர்க்குழு, யாஃபுங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகாவித்தியாலயம், புங்குடுதீவு, 1வது பதிப்பு, 2011. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி). xxvi, 140 பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,