12914 – தர்மதீபம்: அமரர் வி.தர்மலிங்கம் நினைவு இதழ், 1985.

அமரர் வி.தர்மலிங்கம் குடும்பத்தினர். சுன்னாகம்: திருமதி சரஸ்வதி தர்மலிங்கம், காமதேனு, கந்தரோடை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1985. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

viii, 80 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24 x 18.5 சமீ.

20.10.1985 அன்று வெளியிடப்பெற்ற மானிப்பாய் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் விசுவநாதர் தர்மலிங்கம் அவர்களின் அந்தியேட்டி நிகழ்வின்போது வெளியிடப்பெற்ற நினைவிதழ். குடும்பத்தின் ஒரே பிள்ளையான இவரை அவரது உறவினர் ‘இலங்கையர்’ என்றும் ‘தர்மர்’ என்றும் அன்புடன் அழைப்பர். இவரின் தந்தையார் விசுவநாதர் அந்நாட்களிலேயே அமெரிக்காவுக்குச் சென்று முதுமாணிப் பட்டம் பெற்ற கல்விமானாவார். அமரர் வி.தர்மலிங்கம் (பெப்ரவரி 5, 1918 – செப்டம்பர் 2, 1985) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவராகவும் 23 ஆண்டுகள் தொடர்ச்சியாக உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். 1952ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி முதன் முதலாக தேர்தலில் போட்டியிட்ட போது அதன் தலைவர் தந்தை செல்வா காங்கேசன்துறைத் தொகுதியில் போட்டியிட்ட போது, அவரை ஆதரித்து மாபெரும் கூட்டம் ஒன்றை நடத்தினார். 1960 மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றியீட்டினார். உடுவில் தொகுதியில் மார்ச் 1960 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். அப்பொழுது இவருடன் போட்டியிட்ட கல்விமான் ஹன்டி பேரின்பநாயகம், கூட்டுறவாளர் வீ. வீரசிங்கம், கம்யூனிஸ்ட் வி. பொன்னம்பலம் போன்றவர்கள் தோல்வியடைந்தனர். 1972 ஆம் ஆண்டில் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் ஆகியன இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியைத் தோற்றுவித்தனர். தர்மலிங்கம் மானிப்பாய் (உடுவில்) தொகுதியில் விடுதலைக் கூட்டணி சார்பில் 1977 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆறாவது அரசியல் திட்டத்திலிருந்த சட்ட மூலத்திற்கு அமைய சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்ததனால் இவரின் பதவி 1983 அக்டோபர் 8 இல் பறிக்கப்பட்டது. தர்மலிங்கம் மற்றும் தமிழரசுக் கட்சியின் மு.ஆலாலசுந்தரம் இருவரும் 1985, செப்டம்பர் 2 ஆம் நாள் போராளிகள் குழுவினால் மானிப்பாயில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர். வி.தருமலிங்கம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) என்ற அரசியல் கட்சியின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தனின் தந்தையார் ஆவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32302).

மேலும் பார்க்க: 12228.

ஏனைய பதிவுகள்

Tragamonedas Cleopatra Conocer los hechos

Content Croquis Y Vivencia Sobre Consumidor Legalidad De los Juegos Sobre Tragamonedas De balde Online ¿en que consisten Los Prerrogativas De estas Tragamonedas Online Sin