மலர்க் குழு. உரும்பிராய்: ஆசிரியமணி அருணாசலம் பஞ்சாட்சரம் குடும்பத்தினர், உரும்பிராய் மேற்கு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2007. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிறின்டேர்ஸ்).
78 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5 x 11.5 சமீ.
பல்வேறு பிரமுகர்களின் அஞ்சலி உரைகளுடன், அருணாசலம் பஞ்சாட்சரம் அவர்கள் வாழ்வும் வளமும், ஆசிரியமணி ஆற்றிய சேவைகளில் மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டியவை கருணை இல்லத்தின் காருண்ய சேவை, பொன் முகத்தான்: வெண்பா (க.சச்சிதானந்தன்), பண்டிதமணியும் ஆசிரியமணியும் (அ.பஞ்சாட்சரம்), குரு சிஷ்ய பரம்பரை, ஆசிரியமணியின் ஆக்கங்களில் சில: உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோயில் வரலாறும் மகத்துவமும், இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம், எங்கள் தெய்வம், பண்டிதமணி அவர்களும் அவர் பெற்ற பாராட்டுக்களும், சைவாசிரிய கலாசாலைக்கு விளக்கேற்றிய மூவர், இலங்கையில் சைவப் பாட சாலைகளின் பணி (ச.ஏழூர் இராசரத்தினம்), உரும்பிராய் பற்றிய நோக்கு ஆகிய ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 003758).