12930 – காசிநாதர் மான்மியம்.

கா.சிவபாலன் (பதிப்பாசிரியர்). சாவகச்சேரி: திரு.க.காசிநாதர் குடும்பம், ‘ஆயம்’, மட்டுவில் வடக்கு, 1வது பதிப்பு, மாசி 2005. (சாவகச்சேரி: திருக்கணிதப் பதிப்பகம், 114, டச்சு வீதி).

xlvi, 86 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20 x 14.5 சமீ.

மட்டுவில், சந்திரமௌலீச வித்தியாசாலையில் பணியாற்றிய அமரர் கந்தர் காசிநாதர் அவர்களின் அமரத்துவத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவுமலர். தெல்லிப்பழை துர்க்கை அம்மன்மேற் பாடப்பெற்ற பாடலும், பஞ்சபுராணங்களும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. வெறும் நினைவஞ்சலி மலராக மாத்திரமன்றி, மட்டுவில் மண்ணின் பெருமைகூறும் பல படைப்புக்களும் இம்மலரில் தொகுக்கப்பெற்றுள்ளன. சிவஸ்ரீ அ.சிவசாமிக் குருக்கள் எழுதிய சந்திபுர தலவரலாறு, ஈழத்துப் பேரறிஞர்களான ம.க.வேற்பிள்ளை, பண்டிதர் ம.வே.குருகவி மகாலிங்கசிவம், பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, பண்டிதர் ம.க.வே. திருஞானசம்பந்தர் ஆகியோரது வாழ்க்கை வரலாறு என்பனவும் இந்நூலில் சிறப்பிடம் பெறுகின்றன. மட்டுவில், சந்திரமௌலீச வித்தியாசாலையின் பூர்வீக வரலாற்றுக் குறிப்புகளும் இந்நூலின் இறுதியில் காணப்படுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36117).

ஏனைய பதிவுகள்

14203 தமிழ் வேதம் தந்த கணபதி.

கந்தையா பத்மானந்தன். காரைநகர்: அம்மாத்தை வெளியீட்டகம், வாரி வளவு, 1வது பதிப்பு, 2019. (தெகிவளை: அனுபவ பதிப்பகம், ஊசநயணந னுபைவையடஇ 14, அத்தபத்து டெரஸ்). X, 88 பக்கம், விலை: ரூபா 350., அளவு:

Mostbet Eng Yaxshi Bukmekerlik Kompaniyasi

Mostbet Com Güvenli Mi? İçerik File Mostbet Complaint Online Complaint Against Mostbet Mostbet-rasmiy Veb-saytga Ummiy Nuqtai Mostbetcom Güvenli Mi? Etiket: Mostbet Mərc Krs 0000798402 Mostbet

12511 – கல்வியும் கலைத்திட்டமும்.

சபா.ஜெயராசா. யாழ்ப்பாணம்: அபிராமி பதிப்பகம், 17, ஜும்மா பள்ளிவாசல் வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1984. (யாழ்ப்பாணம்: அபிராமி பதிப்பகம்). 63 பக்கம், விலை: ரூபா 12.00, அளவு: 17×12 சமீ. இந்நூல் கல்வியும்

13A22 – பிரதேச வரலாற்று மூலங்கள்: ஒரு நூல்வழித் தேடல்: தீவகம்.

என்.செல்வராஜா. லண்டன்: யாழ்.தீவக ஒன்றியம், பிரித்தானியா, 2வது பதிப்பு, மே 2018, 1வது ஜேர்மன் பதிப்பு, செப்டெம்பர் 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). v, 129 பக்கம்,

12702 – அரங்கியல் நூல்: க.பொ.த.உயர்தரம் (நாடகமும் அரங்கியலும்).

வனிதா சுரேஸ்.களுவாஞ்சிக்குடி: திருமதி வனிதா சுரேஸ், வாகரையார் வீதி, களதாவளை-1,1வது பதிப்பு, தை 2006. (மட்டக்களப்பு: நியூ கீன் அச்சகம், 73, முனை வீதி). v, 62 பக்கம், விலை: ரூபா 125.00, அளவு:

14232 மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகம் எட்டாந் திருமுறை மூலமும் பல ஆராய்ச்சி அகராதிகளும்.

மு.கணபதிப்பிள்ளை (பதிப்பாசிரியர்). சென்னை: சைவசித்தாந்தப் பெருமன்றம், 1வது பதிப்பு, வைகாசி 1992. (சென்னை 600002: காந்தளகம், 68 (834) அண்ணாசாலை). ஒஎiii, 225 பக்கம், விலை: ரூபா 50.00, இந்திய ரூபா 15.00, அளவு: