12930 – காசிநாதர் மான்மியம்.

கா.சிவபாலன் (பதிப்பாசிரியர்). சாவகச்சேரி: திரு.க.காசிநாதர் குடும்பம், ‘ஆயம்’, மட்டுவில் வடக்கு, 1வது பதிப்பு, மாசி 2005. (சாவகச்சேரி: திருக்கணிதப் பதிப்பகம், 114, டச்சு வீதி).

xlvi, 86 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20 x 14.5 சமீ.

மட்டுவில், சந்திரமௌலீச வித்தியாசாலையில் பணியாற்றிய அமரர் கந்தர் காசிநாதர் அவர்களின் அமரத்துவத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவுமலர். தெல்லிப்பழை துர்க்கை அம்மன்மேற் பாடப்பெற்ற பாடலும், பஞ்சபுராணங்களும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. வெறும் நினைவஞ்சலி மலராக மாத்திரமன்றி, மட்டுவில் மண்ணின் பெருமைகூறும் பல படைப்புக்களும் இம்மலரில் தொகுக்கப்பெற்றுள்ளன. சிவஸ்ரீ அ.சிவசாமிக் குருக்கள் எழுதிய சந்திபுர தலவரலாறு, ஈழத்துப் பேரறிஞர்களான ம.க.வேற்பிள்ளை, பண்டிதர் ம.வே.குருகவி மகாலிங்கசிவம், பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, பண்டிதர் ம.க.வே. திருஞானசம்பந்தர் ஆகியோரது வாழ்க்கை வரலாறு என்பனவும் இந்நூலில் சிறப்பிடம் பெறுகின்றன. மட்டுவில், சந்திரமௌலீச வித்தியாசாலையின் பூர்வீக வரலாற்றுக் குறிப்புகளும் இந்நூலின் இறுதியில் காணப்படுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36117).

ஏனைய பதிவுகள்