ஆர்.செல்லையா (மூலம்), இ.நாகராஜன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சன்லைற் டையேர்ஸ் அன் றைக்கிளீனர்ஸ், பெரியகடை, 1வது பதிப்பு, மே 1970. (யாழ்ப்பாணம்: அர்ச. பிலோமினா அச்சகம்).
(8), 216 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18 x 12 சமீ.
யாழ்நகர் பிரதான பேருந்து நிலையத்துக்கு எதிராக ளுரடெiபாவ டுயரனெசல என்ற வர்த்தக தாபனத்தை நிறுவி இயக்கிய அமரர் ஆர்.செல்லையா அவர்களின் வாழ்க்கைச் சரித நூல். தனிப்பட்ட வர்த்தக நிறுவனமொன்று யாழ்மண்ணில் உருவாகி வளர்ந்த வரலாறு இந்நூலில் உரிமையாளரின் வாழ்க்கை வரலாற்றுடன் இணைந்த வகையில் அவரது வாய்மொழிமூலக் கதையைக் கேட்டு இ.நாகராஜன் அவர்களால் எழுத்தில் வடிக்கப்பட்டு, ஒரு சுவைமிகு நாவலைப்போன்று சொல்லப்பட்டுள்ளது. திரு. செல்லையா அவர்கள் தன்னுடைய சுயதேவையை, இலட்சியங்களைப் பூர்த்திசெய்வதற்கு நேர்மையென்ற பாதையில் எவ்வளவு தூரத்திற்குச் சென்றுள்ளார் என்றும், எத்தகைய சோதனைகளுக்குத் தன்னை உள்ளாக்கிக்கொண்டார் என்றும் இச்சுயசரிதை சொல்கின்றது. நூல் வெளிவந்த காலமாகிய 1970களுக்கு முந்தைய 50 ஆண்டுக்கால சமூக வரலாற்றை இச்சுயசரிதையின் மூலம் அறியும் எமக்கு அக்காலகட்டத்து யாழ்ப்பாணத்தின் சாதிவெறி பற்றியும் அறிந்துகொள்ள முடி கின்றது. யாழ் மண்ணில் தமிழில் வெளியான முதலாவது சுயசரித நூல் இதுவென்று கருதப்படுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28876. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 004526).