12947 – பாடிப்பறந்த குயில்கள் (மறைந்த 98 இசைக்கலைஞர்களின் சரிதம்).

முருகு. (இயற்பெயர்: ச.முருகையா). யாழ்ப்பாணம்: ச.முருகையா, வாஹினி பிரசுராலயம், 45 சுவாமியார் வீதி, கொழும்புத்துறை, 1வது பதிப்பு, ஆவணி 2016. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ பிரிண்டர்ஸ், பிரவுண் வீதி).

xv, 303 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 21 x 14.5 சமீ.

ஈழத்தின் இசைக்கலைப் பாரம்பரியத்தில் வாழ்ந்து மறைந்த 98 இசைக் கலைஞர் களின் வாழ்வும் பணிகளும் பற்றிப் பேசுவதாக இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலில் வாய்ப்பாட்டுக் கலைஞர்கள் 34 பேரினதும், வயலின் கலைஞர்கள் 15 பேரினதும், வீணைக் கலைஞர்கள் 2 பேரினதும், பரதக் கலைஞர்கள் 2 பேரினதும், தவில்-நாதஸ்வரக் கலைஞர்கள் 3 பேரினதும், ஆர்மோனியக் கலைஞர்கள் 2 பேரினதுமாக 58 கலைஞர்கள் பற்றிய புகைப்படங்களுடனான விரிவான தகவல்களும், இவர்களைப் பற்றி அறிந்தவை இவ்வளவே என்ற தலைப்பில் இரண்டாவது பகுதியில் பாட்டுக் கலைஞர்கள், வீணை வித்துவான்கள், வயலின் வித்துவான்கள் எனப் பல்துறைசார்ந்த மேலும் 40 கலைஞர்களின் சுருக்கமான வாழ்வும் பணிகளும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இக்கலைஞர்களில் பலரும் வாழ்ந்த அக்காலங்களில் அவர்கள்மீது ஊடகவெளிச்சம் பாய்ச்சப்பட்டிருக்கவில்லை. இவர்கள், சக கலைஞர்கள், சிறு ரசிகர் வட்டம் ஆகிய வரையறுக்கப்பட்ட ஆதரவுடன் வாழ்ந்து மறைந்ததால், இன்றைய தலைமுறையினர் இவர்கள் தொடர்பான அடிப்படைத் தகவல்களையே பெறமுடியாத நிலை காணப்படுகின்றது. இவர்களது போதனைகள், வேதனைகள், சாதனைகள் என்பவை மக்களை முறையாகச் சென்றடையவேண்டும் என்ற உணர்வுடன் கவிஞர் முருகு அவர்கள் இத்தொகுப்பை தனிமனித முயற்சியாக மேற்கொண்டு வெற்றிகண்டிருக்கிறார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 253891CC).

ஏனைய பதிவுகள்

14323 அரசியலமைப்பு 2000: பாராளுமன்ற விவாதங்கள்.

இரா.தர்மகுலசிங்கம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 3: இன விவகார, தேசிய ஒருமைப்பாட்டு பிரிவு, நீதி அரசியலமைப்பு விவகார, இன விவகார தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, 152, காலி வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2000. (கொழும்பு

12110 – திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக மலர்.

எஸ். திருச்செல்வம் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: எஸ்.திருச்செல்வம், தலங்காவற் பிள்ளையார் கோவில், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1988. (யாழ்ப்பாணம்: முரசொலி அச்சகம்). (52) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×18.5 சமீ. மேற்படி

12453 – இந்து மாநாட்டுச் சிறப்பு மலர்-2007.

மலர்க்குழு. வவுனியா: வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி, பூந்தோட்டம், 1வது பதிப்பு, 2007. (வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக் கலையகம்). ix, (3), 44 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ. சிவஸ்ரீ

14266 அரசறிவியல் அறிமுகம். எஸ்.கீதபொன்கலன்.

கொழும்பு: சந்தியாபிள்ளை கீதபொன்கலன், விரிவுரையாளர், வரலாற்று அரசறிவியல் துறை, கொழும்புப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1993. (கொழும்பு 12: சீ.வீ.ஆர். பிரின்டர்ஸ், குணசிங்கபுர).vii, 164 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21×14 சமீ.