த.செல்வநாயகம். மட்டக்களப்பு: த.செல்வநாயகம், 37, திசவீரசிங்கம் சதுக்கம், எல்லை வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1993. (மட்டக்களப்பு: புனித வளனார் கத்தோலிக்க அச்சகம்).
xii, (4), 92 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, தகடுகள், அளவு: 21 x 14.5 சமீ.
கலாசூரி F.X.C.நடராசா, பிறப்பும் ஆரம்பக் கல்வியும், ஆசிரியர் பயிற்சியும் மட்டுநகர் வருகையும், ஆசிரியர் பணியும் இல்வாழ்வும், வித்துவான் பயிற்சியும் விரிவரையாளர் பணியும், அரசகரும மொழித் திணைக்கள உத்தியோகம், இளைப்பாறிய பின், நூலாசிரியர், இயல்புகள்-குணாகுணங்கள், தன்மைகள் ஆகிய ஒன்பது பிரதான இயல்களில் மகாவித்துவான் F.X.C.நடராசா அவர்களின் வாழ்வும் பணிகளும் விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. பிற்சேர்க்கையாக கலாசூரி விருதுப் பட்டயம், ஆணையாளர் Dr.N.D.விஜயசேகரா கடிதம், ஆணையாளர் பீற்றர் அபேசேகரா கடிதம், மகிமைப் பட்டங்களும் விபரமும், குரவர்கள்ஃஆசிரியர்கள், புலவர்மணி மன்றத்தினரின் வைரவிழாப் பாராட்டு வாழ்த்து, மட்டக்களப்பு தமிழ் மன்றத்தினரின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா அழைப்பு, குடும்ப விபர அட்டவணை ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13442).