12951 – நவாலியூர் சோமசுந்தரப் புலவர்.

ஸ்ரீ பிரசாந்தன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

60 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21.5 x 14.5 சமீ., ISBN: 978- 955-659-557-4.

நவாலியூர் க.சோமசுந்தரப் புலவர் (25.05.1878-10.07.1953) தங்கத் தாத்தா என அன்பாக அழைக்கப்பட்டவர். ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை போன்ற செய்யுள் உள்ளிட்ட பதினைந்தாயிரம் செய்யுள்கள் வரை சுவையான முறையில் எளிய தமிழில் பாடி வழங்கியுள்ளார். பனையின் பெருமைகளைக் கூறும் தாலவிலாசம், கதிர்காமம் முருகக் கடவுளைக் குறித்து பாடிய கதிரைச் சிலேடை வெண்பா உள்ளிட்ட பல படைப்புக்கள் இன்றும் இவரை எமக்கு நினைவூட்டுகின்றன. வலிகாமம் மேற்கில் மானிப்பாய்க் கோவிற்பற்றைச் சேர்ந்த நவாலியூர் என்னும் சிற்றூரில் வன்னியசேகர முதலியார் வழித்தோன்றலாய் அருமையினார் கதிர்காமர், இலக்குமிப்பிள்ளை ஆகியோருக்குப் பிறந்தவர் சோமசுந்தரர். தனது இளமைப் பருவத்திலேயே அட்டகிரி முருகன் பதிகம், அட்டகிரி முருகன் திருவூஞ்சல், சாவித்திரி கதை, பசுவின் கதை போன்ற நூல் களை இயற்றினார். பதிகம், ஊஞ்சல் என்றும் இரண்டு பிரபந்தங்களையும் பாடிய சோமசுந்தரப் புலவர் கலம்பகம், நான்மணி மாலை, அட்டகம், அந்தாதி, சிலேடை வெண்பா, திருப்பள்ளியெழுச்சி ஆகிய பிரபந்தங்களையும் பாடினார். நானூ ற்றுக்கும் மேற்பட்ட அடிகளைக் கொண்ட கலிவெண்பாப் பாவகையால் அமைந்த தாலவிலாசம் என்ற இவரது செய்யுள் நூல் பனையின் பெருமைகளைக் கூறுகிறது. குமரன் பதிப்பகத்தின் இலங்கைத் தமிழ்ச் சுடர்மணிகள் வரிசையில் 21ஆவதாக வெளிவந்துள்ள இந்நூல் சோமசுந்தரப் புலவரின் வாழ்வும் பணிகளும் பற்றிச் சுருக்கமாக விளக்குகின்றது. வாழ்க்கைப் பின்புலம், குழந்தைக் கவிஞர், ஆன்மீகக் கவிஞர், சமூகநலக் கவிஞர், தேசம் குறித்த படைப்பாளி, தன்வாழ்வியற் படைப்பாளி, நாடகாசிரியர் தத்துவ அறிஞர், நல்லாசிரியர், மதிப்பீடு ஆகிய பத்துத் தலைப்புகளில் இவை பதிவுசெய்யப்பட்டுள்ளன. பின்னிணைப்புகளாக காலவரிசையில் புலவர் வரலாறு, புலவர் நூற்பட்டியல், வகைமாதிரிக்குச் சில புலவர் பாடல்கள் என்பன தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

kasyno internetowe opinie

Mines game earning app Mines money game Kasyno internetowe opinie If you play the game Mines at an online casino or in demo mode, its