சண். தவராஜா. ஜேர்மனி: அகரம் வெளியீடு, 1வது பதிப்பு, 2018. (திருக்கோணமலை: ஸ்ரீராம் அச்சகம்).
xx, 188 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5 x 13.5 சமீ., ISBN: 978-955-4036-05-5.
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட சண். தவராஜா, 2004 முதல் சுவிஸில் வாழ்ந் வருகிறார். 1995 ஆம் ஆண்டில் வீக் என்ட் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் செய்தியாளராகத் தனது பணியை ஆரம்பித்த அவர் தொடர்ந்து தினக்குரல் பத்திரிகையின் மட்டக்களப்பு மாவட்ட நிருபராக ஒன்பது வருடங்கள் கடமையாற்றினார். சுவிஸ் நாட்டில் ‘நிலவரம்’ பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றிய அவர் ஜேர்மனி- ஐரோப்பிய தமிழ் வானொலி, தமிழமுதம் போன்ற புகலிடத் தமிழ் வானொலிகளிலும், வு.வு.N. பிரான்ஸ், பு.வு.ஏ. லண்டன், தீபம் – லண்டன் உள்ளிட்ட தொலைக்காட்சிகளிலும் செய்தியாளராகவும் அரசியல் விமர்சகராகவும் பணியாற்றியவர். இந்நூலில் அகரம் சஞ்சிகைக்காக இவர் எழுதிய 25 சமூகவியல், அரசியல்சார் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு, மறுவாசிப்புக்கு ஆளாகும் சிவராம், தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி, தமிழ் மக்களுக்கு என்ன தேவை, மகிந்த குழுமத்தின் சரிவு ஆரம்பம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் -வழிதவறிய சகோதரன், தமிழ்நாட்டில் நிலவும் ஈழத் தமிழர் ஆதரவு அலை காத்திரமான ஒரு தீர்வை நோக்கி இட்டுச் செல்லுமா? இசைப்பிரியா-ஊடகர்? பயங்கரவாதி? ஊடகப் பயங்கரவாதி? இரா.சம்பந்தன் கையில் தமிழர் தலைவிதி? ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு, முஸ்லிம் இனவாதத்தைத் தமிழ் இனவாதத்தால் முறியடித்தல், தமிழகத்தில் திறந்தவெளியில் சிறையிருக்கும் ஈழத்தமிழ் ஏதிலிகள், கிழக்கு மாகாணசபைத் தேர்தல்-தேவை தமிழ் முதலமைச்சரா, இன ஐக்கியமா?, அனந்தி எழிலன்- ஒரு பரிசோதனை எலி, வித்தியா படுகொலைதேவை கலாசாரப் புரட்சி, மட்டக்களப்பின் வரலாறு நேர்மையாகப் பதிவு செய்யப்படுமா?, சுப்பர் சிங்கர் ஜுனியர் பாடல் போட்டி- சிறுவர் உரிமை மீறல், வேட்டி பற்றிய கனவில் இருந்தபோது கட்டியிருந்த கோவணமும் ..? பேசாப் பொருள், சைவத்தமிழ்த் திருக் கோவில்களின் கருவறையில் செந்தமிழ்த் திருமறை வழிபாடு- புதிய தொடக்கத்தின் ஆரம்பம், தோழர் கி.பி. அரவிந்தனின் இறுதி நிகழ்வு-சில மனப்பதிவுகள், புலம்பெயர் நாட்டில் காலாவதியாகும் அரசியல் செயற்பாடுகள், தமிழ் மக்கள் தலையில் திணிக்கப்படவுள்ள தீர்வு- பரிகாரம் ஆகுமா? மரணித்தோரெல்லாம் மாவீரர் உயிரோடிருப்போர் யாவரும் துரோகிகள்?, தேசிய மாவீரர் நாள் ஒரு சடங்கு நிகழ்வா? எனப் பல்வேறு தலைப்புகளில் இக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.