12973 – பெண் விடுதலையும் விடுதலைப் புலிகளும்: தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் எழுத்தும் பேச்சும்.

அன்ரன் பாலசிங்கம் (மூலம்), அறிவன் தமிழ் (தொகுப்பாசிரியர்). சென்னை 600107: தமிழர் தாயகம் வெளியீடு, எண் 1/70 C, பூந்தமல்லி நெடுஞ்சாலை, 1வது பதிப்பு, மே 2015. (சென்னை: பாண்டியன் மறுதோன்றி அச்சகம்).

(12), 147 பக்கம், விலை: இந்திய ரூபா 110., அளவு: 22 x 14 சமீ.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த அன்ரன் பாலசிங்கம் அவர்களின் உரைகளும், எழுத்தாக்கங்களும் இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. பொறுப்பை வாரித் தூற்றிவரும் புளுகர்களுக்கு ஊடே புதிய புறநானூறு படைத்த புலிப்படைத் தலைமகன் என்ற முன்னுரையுடன் தொடங்கும் இத்தொகுப்பில் அரச பயங்கரவாதமும் ஆயுதப் புரட்சியும், சோசலிசத் தமிழீழம், இரண்டு தசாப்தங்களும் புலிகளும், பெண் விடுதலையும் விடுதலைப் புலிகளும், சாதியமும் புலிகளும், புலிகளும் மதச் சுதந்திரமும், ஆக்கிரமிப்பு யுத்தம், மாவீரர் நாள் நிகழ்வு-அன்ரன் பாலசிங்கம் இங்கிலாந்தில் ஆற்றிய சிறப்புரை (27.11.1999), நெருக்கடியைத் தவிர்த்து இயல்பு நிலையைத் தோற்றுவித்தல் அவசியம், பிரச்சினையைப் பேசித் தீர்க்க அரசிற்கு உண்மையான அக்கறை இல்லை (25.3.2000), மாவீரர் நாள் நிகழ்வு-அன்ரன் பாலசிங்கம் இங்கிலாந்தில் சிறப்புரை (27.11.2000), சிறிலங்கா அரசு முழு அளவிலான போருக்குத் தயாராகின்றது (12.01.2001) தமிழ் கார்டியனுக்கு வழங்கிய செவ்வி ஆகிய 12 ஆக்கங்கள் இங்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

12251 – பொருளியல்: முதற் பகுதி.

H.M.குணசேகர, W.D.லக்ஷ்மன். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 2வது பதிப்பு, 1977, 1வது பதிப்பு, 1976. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). vii, 96 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், விலை:

14377 புங்குடுதீவு ஸ்ரீ கணேச வித்தியாசாலை பழைய மாணவர் சங்க வெள்ளி விழா மலர்.

மலர்க் குழு. புங்குடுதீவு: ஸ்ரீ கணேச வித்தியாசாலை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1951. (யாழ்ப்பாணம்: வே.சுந்தரம்பிள்ளை, விவேகானந்த அச்சகம்). 92 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18 சமீ. பண்டிதமணி க.சு.நவநீதகிருஷ்ண பாரதியார்,