12978 – சமாதானத்திற்கு வழி.

தகவல் திணைக்களம். கொழும்பு: இலங்கை தகவல் திணைக்களம், கைத்தொழில் உள்ளுர் விவகார, கலாசார அமைச்சு, 1வது பதிப்பு, 1960. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).

219 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18 x 12 சமீ.

1958 இனக்கலவரத்தின் பின்னர் கடந்துவந்த இரண்டாண்டுகளில், இலங்கையில் சமாதானம் உருவாகி அனைவரும் இணைந்து வாழும் கருத்தியலை இளம் மாணவர்களிடையே விதைக்கும் நோக்கமாக இலங்கைப் பாடசாலை மாணவர்களிடையே ‘சமாதானத்திற்க வழி’ என்ற தலைப்பில் (சாமயே மாவத்த, றுயல வழ Pநயஉந) கைத்தொழில் உள்ளுர் விவகார, கலாசார அமைச்சினால் பாடசாலை கள் தோறும் ஆக்கங்கள் கோரப்பட்டிருந்தன. கிடைத்தவற்றுள் சிறந்ததெனக் கருதிய 14 சிங்களக் கட்டுரைகளையும், எட்டு தமிழ்க் கட்டுரைகளையும், ஐந்து ஆங்கிலக் கட்டுரைகளையும் இந்நூலில் தொகுத்து வழங்கியிருக்கிறார்கள். மும்மொழிகளிலும் அமைந்துள்ள இந்நூலின் பக்கம் 7-116 வரை சிங்கள மொழியிலும், பக்கம் 119-188 வரை தமிழ் மொழியிலும், பக்கம் 191-219வரை ஆங்கில மொழியிலும் விடயங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2904).

ஏனைய பதிவுகள்

Flopped Straight On the Paired

Articles La vuelta on tv: To play A working Board Why you need to Like A small Wager Dimensions Poker Deceased And you will Wet