12980 – மலேசிய தமிழரின் சமகால வாழ்வியல் பரிமாணங்கள்: சில அவதானிப்புக்கள்.

லெனின் மதிவானம். கொழும்பு 8: அமரர் இர.சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு, BQ 2/2 மெனிங் டவுன், மங்கள ரோட், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (கொழும்பு 6: டெக்னோ பிரின்டர்ஸ், 55, டொக்டர் ஈ.ஏ.கூரே மாவத்தை, வெள்ளவத்தை).

52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22 x 14.5 சமீ.

அமரர் இர.சிவலிங்கம் அவர்களின் எட்டாவது நினைவுப் பேருரையாக ஆற்றப்பட்ட உரையின் எழுத்து வடிவம். அட்டனைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு.லெனின் மதிவானம் இலங்கை கல்வியமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பிரதிக் கல்வி வெளியீட்டு ஆணையாளராகப் பணிபுரிகிறார். இவர் கொழும்புத் திட்டம் மற்றும் மலேசியாவின் இராஜதந்திரம், வெளிநாட்டு உறவுகள் நிலையத்தின் புலமைப்பரிசில் பெற்று மலேசியாப் பல்கலைக்கழகத்தில் இராஜதந்திரத் துறையில் முதுமாணிப் பட்டம் பெற்றவர். மலேசிய சமூகத்தில் ஏற்பட்டுள்ள சிறு குழுவினரின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு முழுச் சமூகத்தின் பொருளாதார நிலைமைகளையும் மதிப்பிட முனைவது நியாயமற்றது எனக்கூறும் இவர், இக்கூற்றானது மலேசியத் தமிழருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை மூடிமறைப்பதுடன் அத்தகைய பொருளாதார கலாசாசார பண்பாட்டு ஒடுக்குமுறை களை ஏனைய நாடுகளுக்கு இறக்குமதி செய்வதற்கான முயற்சிகளாகவே காணப்படுகின்றன என்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 44652).

மேலும்பார்க்க: 13யு01,12197,12214,12227,12228,12993

ஏனைய பதிவுகள்

14271 நவீன அரசியற் கோட்பாடுகள்.

அ.சிவராசா. யாழ்ப்பாணம்: பட்டப் படிப்புகள் கல்லூரி, 148/1, ஸ்ரான்லி வீதி, 1வது பதிப்பு, 1989. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). viii, 176 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. இந்நூல் அரசறிவியலின் இயல்பும்

14742 இந்த மண்ணும் எங்களின் சொந்த மண் தான்.

இணுவில் ஆர்.எம். கிருபாகரன். சென்னை 600037: இராமநாதன் பதிப்பகம், நெ.25, 3வது தெரு, ஆபீசர்ஸ் காலனி எக்ஸ்டென்ஷன், முகப்பேர், 1வது பதிப்பு, 2015. (சென்னை 600094: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்). xvi, 160 பக்கம், விலை:

14281 இந்திய வம்சாவளி மக்கள் 94600 பேருக்கு பிரஜா உரிமை வழங்குவதற்கான சட்ட வரைவுக்கு ஆதரவாக நான் ஏன் வாக்களித்தேன்?

சரத் முத்தெட்டுவேகம (மூலம்), எல்.பீ.வணிகசேகர (தொகுப்பாசிரியர்). கொழும்பு: ஊடகத்துறைச் செயலாளர், அரசியலமைப்பு அலுவல்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, 1வது பதிப்பு, 2005. (கொழும்பு 10: சமயவர்த்தன அச்சகம்). 38 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

14394 அணிகலன்கள்: தமிழர் பாரம்பரிய அணிகலன்கள் ஓர் விபரிப்பு.

உமாச்சந்திரா பிரகாஷ். கொழும்பு 6: திருமதி உமாச்சந்திரா பிரகாஷ், இல. 51- 4/1, பெரேரா ஒழுங்கை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2019. (கொழும்பு 6: கே.ஐ.கிரியேஷன்ஸ்). vi, 58 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை:

14966 இருபதாம் நூற்றாண்டு சிந்தனைகள் ஆளுமைகள் நிகழ்வுகள்.

A.B.M .இத்ரீஸ் (பதிப்பாசிரியர்). வாழைச்சேனை 05: சோனகம் வெளியீடு, மஹ்மூட் ஆலிம் தெரு, 1வது பதிப்பு, 2011. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 136 பக்கம், விலை: ரூபா 300.,

14695 சுவர்க்கத்து நறுமணம்: சிறுகதைகள்.

எம்.எம்.ஹிதாயத்துள்ளாஹ். பண்டாரகம: எம்.எம்.ஹிதாயத்துள்ளாஹ், அப்ழல் பதிப்பகம், 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). viii, 118 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 22.5×16 சமீ.,