12980 – மலேசிய தமிழரின் சமகால வாழ்வியல் பரிமாணங்கள்: சில அவதானிப்புக்கள்.

லெனின் மதிவானம். கொழும்பு 8: அமரர் இர.சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு, BQ 2/2 மெனிங் டவுன், மங்கள ரோட், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (கொழும்பு 6: டெக்னோ பிரின்டர்ஸ், 55, டொக்டர் ஈ.ஏ.கூரே மாவத்தை, வெள்ளவத்தை).

52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22 x 14.5 சமீ.

அமரர் இர.சிவலிங்கம் அவர்களின் எட்டாவது நினைவுப் பேருரையாக ஆற்றப்பட்ட உரையின் எழுத்து வடிவம். அட்டனைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு.லெனின் மதிவானம் இலங்கை கல்வியமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பிரதிக் கல்வி வெளியீட்டு ஆணையாளராகப் பணிபுரிகிறார். இவர் கொழும்புத் திட்டம் மற்றும் மலேசியாவின் இராஜதந்திரம், வெளிநாட்டு உறவுகள் நிலையத்தின் புலமைப்பரிசில் பெற்று மலேசியாப் பல்கலைக்கழகத்தில் இராஜதந்திரத் துறையில் முதுமாணிப் பட்டம் பெற்றவர். மலேசிய சமூகத்தில் ஏற்பட்டுள்ள சிறு குழுவினரின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு முழுச் சமூகத்தின் பொருளாதார நிலைமைகளையும் மதிப்பிட முனைவது நியாயமற்றது எனக்கூறும் இவர், இக்கூற்றானது மலேசியத் தமிழருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை மூடிமறைப்பதுடன் அத்தகைய பொருளாதார கலாசாசார பண்பாட்டு ஒடுக்குமுறை களை ஏனைய நாடுகளுக்கு இறக்குமதி செய்வதற்கான முயற்சிகளாகவே காணப்படுகின்றன என்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 44652).

மேலும்பார்க்க: 13யு01,12197,12214,12227,12228,12993

ஏனைய பதிவுகள்