12988 – யார் துரோகிகள்?: சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை.

எம்.எம்.எம். நூறுல்ஹக் (ஆசிரியர்), உவைஸ் முஹம்மட் (பதிப்பாசிரியர்). சாய்ந்தமருது 5: மருதம் கலை இலக்கிய வட்டம், 129 B, ஒஸ்மன் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை).

44 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21 x 15 சமீ., ISBN: 978-955-43179-3-2.

சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையான தனியான உள்ளூராட்சி சபை ஒன்றிற்கான கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் விதத்தில் பன்னூலாசிரியர் ஹாதிபுல் ஹுதா எம். எம்.எம். நூறுல்ஹக் அவர்கள் எழுதிய நூல் இதுவாகும். சாய்ந்தமருது மக்களின் தனியான உள்ளூராட்சி சபைக்கான கோரிக்கையில் உள்ள நியாயங்களையும் அக்கோரிக்கை கிடப்பில் போடப்படுமிடத்தில் இந்த ஊர் மக்கள் எவ்வாறு செயற்படவேண்டும் என்பன போன்ற ஆலோசனைகளையும் கருத்துக்களையும் இச்சிறுநூலில் ஆசிரியர் வழங்கியுள்ளார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 044971).

ஏனைய பதிவுகள்

14780 பஞ்சம் பிழைக்க வந்த சீமை: வரலாற்று நெடுங்கதை.

மு.சிவலிங்கம். கொட்டகலை: குறிஞ்சித்தமிழ் இலக்கிய மன்றம், தமயந்தி பதிப்பகம், 1வது பதிப்பு, ஜுலை 2015. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). xviii, 323 பக்கம், விலை: ரூபா 650., அளவு:

14569 இப்படிக்கு அக்கா: கவிதைத் தொகுதி.

வெற்றிச்செல்வி. (இயற்பெயர்: வேலு சந்திரகலா). கிளிநொச்சி: தவமணி வெளியீட்டகம், 2வது பதிப்பு, ஏப்ரல் 2017, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2007. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்). (10), 41 பக்கம்,