12991 – அடங்காப்பற்று வன்னியில் ஆதிகாலத் தமிழர் வரலாறு: நாகர்காலத்துப் புராதன தொல்பொருட் சின்னங்கள்.

அருணா செல்லத்துரை. வவுனியா: அருணா வெளியீட்டகம், எண் 68, வைரவர் கோவில் வீதி, வைரவர் புளியங்குளம், 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xxiv, 151 பக்கம், புகைப்படங்கள், வண்ணத் தகடுகள், விலை: ரூபா 1300., அளவு: 23.5 x 18 சமீ., ISBN: 978-955-1347-20-8.

அடங்காப்பற்று வன்னியின் இயற்கை அமைப்பு, வேடர்கள்-இயக்கர்கள்-நாகர்கள், ஆறுகளும் அணைக்கட்டுகளும் குளங்களும், புராதன காலங்களும் பிரிவுகளும், சமய வழிபாடுகள், அடங்காப்பற்றில் இலிங்க வழிபாட்டுத் தலங்கள், நாகவழிபாடும் நாகலிங்க வழிபாடும், அடங்காப்பற்று வன்னியில் கருங்கல் செங்கல் பாவனை, அந்நியர் ஆட்சியில் அடங்காப்பற்று வன்னி, அடங்காப்பற்று வன்னியில் நாகர்கால புராதன தொல்லியல் சின்னங்கள் ஆகிய பத்து அத்தியாயங்களில் இந்நூல் புகைப்பட ஆதாரங்களுடன் எழுதப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் அருணா செல்லத்துரை தொல்லியல் பயின்ற ஆய்வாளர் அல்ல. இருப்பினும் தான் கண்டவற்றை பிறரும் அறியும் வகையில் பத்திரிகைகளில் கட்டுரைகளாக எழுதிவருபவர். அவரது சாதனைகள் அடங்காப்பற்று வன்னியிலே தமிழரின் ஆதிகால வரலாற்றை ஆழமாகவும் பரந்தளவிலும் ஆய்வுசெய்வதற்கு அடித்தளம் அமைத்துள்ளன. அக்காலத்துச் சமுதாய நிலைகள், வழிபாட்டு முறைகள், கட்டுமான முறைகள், நீர்த்தேக்கங்கள் என்பன பற்றிய ஆய்வுகளுக்கு அவை ஆதாரமாகின்றன. இதுவரை வேறெவரும் கண்டு அடையாளப்படுத்த முடியாது போன பண்பாட்டுச் சின்னங்கள் பற்றிய விபரங்கள் பெரும் அளவிலானவற்றை அவர் வெளியிடுகின்றார்.

ஏனைய பதிவுகள்

8341 திருக்குறள் பொருட்பால்-அங்கவியல்.

த.துரைசிங்கம். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, ஜுலை 2009. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). iv, 107 பக்கம், விலை:

12091 – இந்து தருமம் 1977 (நடராஜர் சிவகாமியம்மன் மணிவாசகர் குடமுழுக்குச் சிறப்பிதழ்.

வே.தர்மகுலசிங்கம் (இதழாசிரியர்). பேராதனை: இந்து மாணவர் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1977. (யாழ்ப்பாணம்: திருமகள் அழுத்தகம், சுன்னாகம்). xvi, 88 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19

Wager on Sports

Content Matchbook betting golf – Brazil: Serie A Forecasts R1000 Totally free Bet Foot Golf ball Anticipate Sports 13sun 7 Apr Betslip The web abounds

10230 பொருளியல் பகுதி 2: க.பொ.த. (உயர்தர)சனத்தொகை.

எஸ்.ஸ்ரீராம். கொழும்பு 13: எஸ்.ஸ்ரீராம், 111 கல்லூரி வீதி, முதலாவது பதிப்பு, ஜனவரி 2010. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14 டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). 66 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: ரூபா

On line Sportsbook

Content Find Higher 5 Gamess Complete Number of The newest Slots Enjoy Real cash Slots Unlocking The potential of Online Slot Reviews And you may