13000 – முதல் நெருப்பு: தாய்த்தமிழகத்தில் ஈழ நெருப்பை மூட்டிய முதல் வீரன் அப்துல் ரவூப்.

சே.ஜெ.உமர்கயான். தமிழ்நாடு: இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம், 105, ஆர்.பி.ஆர். வணிக வளாகம், குமரன் சாலை, திருப்பூர் 641 601, 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (திருப்பூர்: 641 608: எழில் அச்சகம், அருண் டவர்ஸ், தாராபுரம் சாலை).

112 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 50., அளவு: 20.5 x 14 சமீ.

1995களில் இலங்கையின் இன விடுதலைப்போராட்டம் தீவிரமடைந்திருந்த வேளையில் தமிழகத்திலிருந்து அதற்கு ஆதரவாகக் குரல்கொடுத்துவந்ததுடன் முதல் களப்பலியானவர் தமிழகத்தின் பெரம்பலூரைச் சேர்ந்த அப்துல் ரவூப். 1995ம் ஆண்டு சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தின் போது யாழ். குடா நாடு மீதான பெரும் படையெடுப்பின்போது பல இலட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர் வினால் துயருற்ற அப்துல் ரவூப் அவர்கள், ஈழத்தமிழர்கள் மீதான சிறிலங்கா அரச பயங்கரவாதத்தை எதிர்த்து தமிழ்நாட்டின் திருச்சியில் 15.12.1995 அன்று தீக்குளித்து ஈகைச்சாவடைந்தார். ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து சாவடைந்த முதல் தமிழக உறவு அப்துல் ரவூப் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது வாழ்க்கை 999 பன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புகள் 568 நூல் தேட்டம் – தொகுதி 13 வரலாற்றை இந்நூலில் உணர்வுபூர்வமாக பதிவுசெய்துள்ளார் தமிழக வழக்கறிஞரான சே.ஜெ.உமர்கயான். இடைக்கிடையே தோழர் தமிழகன் தொகுத்த ‘நெருப்பின் வரிகள்’ என்ற கவிதை நூலில் இடம்பெற்ற கவிதைகள் எடுத் தாளப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 261574CC).

ஏனைய பதிவுகள்

Im besten Erreichbar Casino via A1 saldieren

Content A1 Casinos je Glücksspieler aus Alpenrepublik – $ 1 Einzahlung caesars empire Vermag meine wenigkeit meine Gewinne aus unserem Maklercourtage abzüglich Einzahlung behalten? Entsprechend