தொகுப்பாசிரியர் குழு. யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம்இ கல்விஇ பண்பாட்டலுவல்கள்இ விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சுஇ வடக்கு மாகாணம்இ செம்மணி வீதிஇ நல்லூர்இ 1வது பதிப்புஇ 2019. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம்இ இல. 693இ காங்கேசன்துறை வீதி).
(44) பக்கம்இ விலை: குறிப்பிடப்படவில்லைஇ அளவு: 21×15 சமீ.
இந்நூற்பட்டியலின் தொகுப்பாசிரியர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் நா.ஞானகுமாரன்இ ஸ்ரீ பிரசாந்தன்இ சுபதினி ரமேஷ்இ அ.சண்முகதாஸ் ஆகியோரும்இ அப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ச.பத்மநாதன்இ சி.ரமணராஜாஇ ச.முகுந்தன்இ ஈ.குமரன்இ திருமதி செல்வ அம்பிகை நந்தகுமாரன்இ தி.செல்வமனோகரன் ஆகியோரும்இ ஜப்பான் கச்சுயின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும்இ சாவகச்சேரி கலாச்சார உத்தியோகத்தரான கு.றஜீபன் என மொத்தமாக பன்னிருவர் இணைந்து பணியாற்றியுள்ளனர். திருக்குறள் தொடர்பான இலங்கையர்களின் பங்களிப்பைப் பதிவுசெய்யும் இந்நூல்விபரப்பட்டியலின் பதிவுகள்இ நூல்கள் (சிறப்பு மலர்கள்இ கட்டுரைத் தொகுப்புகள்)இ கட்டுரைகள் (தொகுப்புஇ மலர்கள்இ செய்தித்தாள்கள்)இ மொழிபெயர்ப்புக்கள்இ பதிப்புஇ திருக்குறளை மையப்படுத்திய புதுமையான முயற்சிகள்இ திருக்குறள் கதைகள்இ உரைகள்இ செய்தித்தாள் பதிவுகள்இ பல்கலைக்கழக ஆய்வுகள்இ பிற முயற்சிகள் ஆகிய பத்து பிரிவுகளின்கீழ் வழங்கப்பட்டுள்ளன.