அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை. யாழ்ப்பாணம்: பிஷப் சவுந்தரம் மீடியா சென்டர், இல.891, ஆஸ்பத்திரி வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2015. (யாழ்ப்பாணம்: தாயகம் டிஜிட்டல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அருகில், திருநெல்வேலி).
(14), 282 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 25×19 சமீ.
நேரலை பத்திரிகையியல் ஓர் அறிமுகம் (Introduction to Online Journalism ) யெடளைஅஎன்ற இந்நூல் பிஷப் சவுந்தரம் மீடியா சென்டர் வெளியிடும் 12ஆவது நூலாகும். 1. நேரலை பத்திரிகையியல் ஓர் அறிமுகம், 2. நேரலை பத்திரிகையியல் என்றால் என்ன? 3.நேரலை செய்தி அறிவிப்பில் ஈடுபடும் செய்தியாளர் கேட்கவேண்டிய கேள்வி, நேரலை ஊடகத்தின் பலம் என்ன?, அதனை நவீன செய்தி அறிவிப்பிற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதாகும், 4. ஒருங்கிணைக்கப்பட்ட அல்லது பல்லூடக செய்தியியலில் அச்சு ஊடக செய்தியாளர்-மின் ஊடக செய்தியாளர் என்ற பிரிவு இல்லாமல் போகிறது, 5. கடந்த ஒரு தசாப்தகால ஊடகப் புரட்சியின் விளைவாக எவரும் ஊடகப் பணியாற்றலாம்-யாரும் ஊடகத்தை கட்டுப்படுத்த முடியாது என்ற ஒரு புதிய நிலை உருவாகியுள்ளது, 6. புளொக்ஸ் என்கிற சமூக வலைத்தளத்தின் வரவு நவீன நேரலை செய்தியியலில் ஒரு பாரிய புரட்சியாகும், 7. இணைப்புகள்-கருத்துக்கள் என்ற இரண்டு அம்சங்களுமே வலைப்பதிவை உயிரூட்டமுள்ளதாக்கி உள்ளன, 8. வலைப்பதிவை பத்திரிகைப் பணிக்காகவோ-வணிக நோக்கிற்காகவோ வெறும் தனிப்பட்ட துறைசார் விருப்பங்களை வெளியிடவோ பயன்படுத்தலாம், 9. நோக்கைத் தெரிதல்-விடயங்களை அனுப்புதல்-குறிப்பும் இணைப்பும் என்பன புதிய புளொக்கை ஆரம்பிக்கும் போது கவனிக்கவேண்டிய மூன்று படிகள் ஆகும், 10. சிறிய செய்திகளை வேகமாக அனுப்புவதற்கு சிறந்த வழியாக ருவிற்றர் சமூக வலையமைப்பு விளங்குகின்றது, 11. இன்று உலகின் மிகப் பிரபல்யமான செய்திப் பரிமாற்றம் செய்யும் சமூக வலைத்தளமாக வாட்ஸ் அப் விளங்குகின்றது, 12. பேஸ்புக் 13 வயதுக்கு உட்பட்டவர்கள் அதனைப் பயன்படுத்தமுடியாது என்ற கட்டுப்பாட்டைத் தவிர வேறு எந்த கட்டுப்பாடுகளையோ வரையறைகளையோ விதிக்கவில்லை, 13. செல்பி மோகம் பிரபல்யமாகி உயிரைப் பறிக்கின்ற அளவிற்கு மோசமாகியுள்ளது, 14. நேரலை செய்தி இயலின் பாரிய பலம் பாவிப்பாளர் உருவாக்கும் உள்ளடக்கம் ஆகும், 15. பாவிப்பாளர் உருவாக்கும் உள்ளடக்கத்தினை எவ்வாறு நேரலை செய்தியாளர்கள் அணுகவேண்டும், 16. நேரடியான பாவிப்பாளர் உள்ளடக்கங்களை உருவாக்கும்போது கவனிக்க வேண்டியவை, 17. பாவிப்பாளர் உருவாக்கும் உள்ளடக்கங்களில் சிறந்த படங்களை வெளியிடும் தளமாக பிளிக்கர் விளங்குகின்றது, ஆகிய விரிவான தலையங்கங்களைக்கொண்ட 17 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை, யாழ்ப்பாணம் பிஷப் சவுந்தரம் மீடியா சென்டரின் ஸ்தாபகராவார்.