கோகிலா மகேந்திரன். ஜேர்மனி: பாதிக்கப்பட்டோரின் குரல், VIVO International e.V., Postfach 5108, 78430 Konstanz, 1வது பதிப்பு, ஓகஸ்ட், 2006. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி).
vi, 60 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18 சமீ.
இந்நூலானது, பாடசாலைகளில் சீர்மிய நடவடிக்கை தொடர்பான மேலதிகப் பயிற்சிக் கைந்நூல். இது சீர்மிய ஆசிரியர்களுக்கானது. ஜேர்மன் ஏஐஏழு நிறுவனத்தின் உதவியுடன் சீர்மிய ஆசிரியர்களின் உயர்மட்டப் பயிற்சி நெறிக்காக வலிகாமம் கல்வி வலயத்தினால் தயாரிக்கப்பட்டது. அறிமுகம், இரு துருவக் கோளாறு, மனச்சோர்வை இனம்காணுதல், டிஸ்தீமியாவை இனம்காணுதல், மனச்சோர்வு ஏற்படுவதற்கான காரணிகள், தற்கொலை, சுயகணிப்பு, குற்ற உணர்வு, கோபம், விமர்சனங்களை எதிர்கொள்ளல், மதுப்பாவனை, மனச்சோர்வுக்கான சிகிச்சை ஆகிய பன்னிரு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஒருவர் என்ன விதமான மனச்சோர்வினால் அவதிப்படுகிறார் என்பதைப் பொறுத்தே எந்தவொரு சிகிச்சையும் பலன் தரும். கடும் மனச்சோர்வு என்பது ஆறு மாதங்கள், அல்லது சிகிச்சை அளிக்கப்படாத பட்சத்தில் அதற்கும் மேல் நீடிக்கக்கூடியது. நோயாளியுடைய வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கக்கூடியது. இருமுனைச் சீர்குலைவு என்பது பதற்ற-சோர்வு மனநோய் என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுகிறவர்கள் மாறி மாறி இரண்டு எல்லைகளுக்குப் போய்விடுவார்கள்; அதாவது, சில காலம் அதீத சுறுசுறுப்போடு (பதற்றத்தோடு) இருப்பார்கள், ஆனால் சில காலம் திடீரென அதீத சோகத்தோடு (சோர்வோடு) இருப்பார்கள். நீடித்த மனத்தளர்ச்சி (டிஸ்தீமியா) என்பது கடும் மனச்சோர்வின் அளவுக்கு நோயாளியை முடக்கிவிடாது என்றாலும் இயல்பாகச் செயல்படுவதைச் சிரமமாக்கிவிடும். இந்த நோயாளிகள் சிலருக்குக் கடும் மனச்சோர்வும் வந்து வந்து போகும்.