13057 குறள் தாழிசை.

வேதா இலங்காதிலகம். முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், விசுவமடு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி).

xv, 96 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 18.5×13 சமீ., ISBN: 978-955-40961-9-6.

டென்மார்க்கில் புலம்பெயர்ந்து வாழும்  கவிஞர் வேதா இலங்காதிலகம் வள்ளுவரின் குறள்பாக்களின் சாயலில் வாழ்வியற் கருத்துக்களை இங்கு ஈரடிகளில் எடுத்துக் கூறுகின்றார். குறள் தாழிசை என நூலுக்குத் தலைப்பிட்டுள்ளார். குறள் தாழிசை தமிழ் பாவினங்களில் ஒன்றான தாழிசையின் வகைகளுள் ஒன்றாகும். இது குறள் வெண்பாவின் இனமாகும். இதில் இரண்டு வகை உண்டு. ஈற்றடி குறைந்து வருவது ஒருவகை. செப்பலோசை சிதைந்து வருவது மற்றொருவகை. இந்நூலில் அணிந்துரை வழங்கியுள்ள கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன் ‘குறள் என்பது குறுகியது என்ற பொருளைத் தருகின்றது. எனவே திருக்குறளுடன் ஒப்புநோக்காது குறுகிய வரிகளில் வாழ்வியற் கருத்துக்களைக் கூறமுயலும் நூலாக இந்நூலை நோக்குவதே பொருத்தமாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இவற்றைவிட வேதாவின் மொழிகள் என்ற பகுதியில் வெவ்வேறு காலப் பகுதியில் அவரால் எழுதப்பட்ட சிந்தனைகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 63698).

ஏனைய பதிவுகள்