எம்.என்.மொஹிதீன் (தமிழாக்கம்). கண்டி: சர்வதேச பௌத்த கேந்திரம், இல. 2, அநகாரிக்க தர்மபால மாவத்தை, செங்கடகல ஐக்கிய பௌத்த மண்டலம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை).
32 பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 20×14 சமீ.
இது திரிபிடக பாளி மூலத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது. சித்தார்த்த கௌதமர் புத்தநிலையை அடைந்து 45 வருட காலத்திற்குள் போதித்த போதனைகள் 17065 என்பர். இவை தேவர்களினதும் மனிதர்களினதும் இம்மை, மறுமை நன்மைகருதி மிகத் தெளிவாகவும் ஆரம்ப, இடைநிலை, இறுதிக் கட்டங்களுக்குப் பொருந்துவனவாகவும் அமைந்துள்ளன. இப்போதனைகளுள் தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் இவ்வுலக, மறு உலக நன்மை கருதி போதித்த மஹா மங்கள சுத்தம் 38 தம்ம போதனைகளை உள்ளடக்கியது. இம் மங்களங்களில் 32 மங்களங்கள் இவ்வுலக நன்மை கருதியும் 6 மங்களங்கள் மறு உலக நன்மை கருதியும் அருளப்பட்டுள்ளன. இதன்படி மங்களம் என்பது இவ்வுலக, மறு உலக நன்மை தரும் விடயங்கள் என்பது கருத்தாகும். இந்நூலிலுள்ள மகா மங்கள சுத்தத்தின் தமிழாக்கம் பாளி ஒலிப்பெயர்ப்புடன் தமிழ் விரிவுரையையும் உள்ளடக்கியுள்ளது.