ஆ.கந்தையா. கொழும்பு: ஆ.கந்தையா, ஆசிரியர், கொழும்பு இந்துக் கல்லூரி, 2வது பதிப்பு, ஐப்பசி 1966, 1வது பதிப்பு, ஆனி 1964. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம்).
346 பக்கம், விலை: ரூபா 3.50, அளவு: 21×13.5 சமீ.
இந்நூல் கல்விப் பொதுத் தராதர சாதாரணதர தேர்வுக்குரியது. இலங்கை வித்தியாபகுதியாரின் 1967-1968 ஆம் ஆண்டுகளுக்குரிய புதிய பாடத்திட்டத்திற்கமைவாக இப்பதிப்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. திருக்குறள், தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம், திருப்புகழ், சமயப் பெரியார் வரலாறு ஆகிய பகுதிகளில் 1967-1968 ம் ஆண்டுகளுக்குரிய பாடத்திட்டத்திற்கமைவாக உரிய பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இரு பகுதிகளைக்கொண்டுள்ள இந்நூலின் ‘பொதுவியல்’ என்ற முதலாம் பகுதியில் இந்து சமய நூல்கள், இந்து சமயத்தின் பிரதான பிரிவுகள், சமயப் பெரியார்களும் அவர்கள் அருளிய நூல்களும், நீதிநூல்கள் ஆகிய நான்கு பாடங்களும், ‘சிறப்பியல்’ என்ற இரண்டாம் பகுதியில் சைவசித்தாந்த சாத்திரங்கள், சைவசித்தாந்த அடிப்படைக் கோட்பாடுகள், சைவசித்தாந்த சாதனைகள், சைவசமயப் பெரியார் வரலாறு, பாடப் புத்தகம் (திருவருட்பயன்) ஆகிய ஐந்து பாடங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61979).