கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, 2006. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்).
ix, 85 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ.
2007ஆம் ஆண்டு முதல் பாடசாலைகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்ற, புதிய பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்தப் பாடநூல் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் வழிகாட்டலுக்கேற்ப பாட நிபுணத்துவக் குழுவினாலும் பாடநூல் மதிப்பீட்டுக் குழுவினாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்நூலின் எழுத்தாளராக திருமதி கமலாம்பிகை கிருஷ்ணபிள்ளை பணியாற்றியுள்ளார். என்.எஸ்.ஞானகுமரன் பொருத்தமான சித்திரங்களை வரைந்துள்ளார். விநாயகர், கடவுள், வீட்டில் சைவம், நிருத்திய கருமங்கள், சமய விழுமியங்கள், வாழ்வியல் சடங்குகள், விரதங்களும் பண்டிகைகளும், திருக்குறிப்புத் தொண்ட நாயனார், கண்ணப்ப நாயனார், பஞ்சபுராணம், தோத்திரப் பாடல்-திருப்புகழ், ஆலய வழிபாடு, சைவசமய குரவர் நால்வர், ஞானப்பிரகாச முனிவர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர், முப்பொருள், ஈழத்துச் சைவ மரபு, விநாயகர் ஆலயங்கள், திருக்கோணேச்சரம், கதிர்காமம், இலங்கையில் உள்ள சமயங்கள் ஆகிய 21 பாடங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54996).