13141 திருக்கேதீச்சர மான்மியம் 1: புராதன காண்டம்.

மு.கந்தையா. மன்னார்: திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை, சிவானந்த குருகுலம், திருக்கேதீச்சரம், 1வது பதிப்பு, மே 1989. (யாழ்ப்பாணம்: மஹாத்மா அச்சகம், ஏழாலை).

vi, 136 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 24.5×16.5 சமீ.

திருக்கேதீச்சர மான்மியம் ஆறு காண்டங்களாக எழுதப்பட்டது. புராதன காண்டம், பொற்பொளிர் காண்டம் என்பவை திருக்கேதீச்சர ஆலய திருப்பணிச்சபையால் சிவானந்த குருகுல வெளியீடாக வெளிவந்தன. கரந்துரை காண்டம், நித்திய நைமித்திய காண்டம் இரண்டும் திருப்பணிச்சபையால் வெளியிடப்பட்டன. மற்றைய இரு காண்டங்கள் பற்றிய தகவல் இல்லை. இம்முதலாம் பாகத்தில் காப்பு, கடவுள் வாழ்த்துப் படலம், நாட்டுப் படலம், நகரப் படலம், பாலாவிப் படலம், பாயிரப் படலம், திருக்கைலாசப் படலம், கேது பூசைசெய் படலம், துவஷ்டா பூசித்த படலம், துவஷ்டா அரசுசெய் படலம், மண்டோதரி பேரருள் பெற்ற படலம், மாந்தை விகாசப் படலம், விஜயன் வருகைப் படலம், அருஞ்சொல் விளக்கம் ஆகிய பிரிவுகளில் திருக்கேதீச்சரத்தின் பெருமைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10225).

ஏனைய பதிவுகள்