13178 சுப்ரமண்யம்: நோர்வூட் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக சிறப்பு மலர்-2001.

மலர்க்குழு. நோர்வூட்: ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம், 1வது பதிப்பு, டிசம்பர் 2001. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு).

140 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×19.5 சமீ.

நோர்வூட், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் கும்பாபிஷேக நிகழ்வு 29.10.2001 அன்று நிறைவெய்தியதையொட்டி இச்சிறப்பு மலர் 15.12.2001 அன்று மண்டலாபிஷேகப் பூர்த்தி நாளில் வெளியிடப்பட்டது. இதில் ஆசியுரைகள், முருகனின் விஷேட திருத்தலங்கள், ஸ்ரீ கந்தசஷ்டி விரதம், மகா சிவராத்திரி தத்துவம், தெய்வச்சிறப்புகள், சிறப்புக்கட்டுரைகளும் கதைகளும், பஞ்சபுராணங்கள், கோயில் ஊஞ்சற் பாடல்கள் என்பவை இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 22337).

ஏனைய பதிவுகள்

13847 நந்தியின் நாவல்களில் சமூக நோக்கு.

ம.இரகுநாதன். யாழ்ப்பாணம்: நினைவுப் பேருரைக் குழு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: வைரஸ் கிரப்பிக்ஸ், இணுவில்). 33 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ. 29.06.2016 அன்று யாழ்ப்பாணப்

14859 உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு கொழும்பு: 22,23,24 ஒக்டோபர் 2002: சிறப்புமலர்.

சிறப்பு மலர் தயாரிப்புக் குழு. கொழும்பு: இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம், துறைமுகங்கள் அபிவிருத்தி கப்பற்றுறை அமைச்சு, கிழக்கு அபிவிருத்தி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2002. (அச்சக விபரம்

17285 நாதம் 2017.

மலர் குழு. கொழும்பு: தமிழ் கர்நாடக இசை மன்றம், ரோயல் கல்லூரி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). 152 பக்கம், விலை: