சரஸ்வதி இராமநாதன். கொழும்பு 4: இந்து வித்தியாவிருத்திச் சங்கம், சரஸ்வதி மண்டபம், இல. 75, லோரன்ஸ் வீதி, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் அச்சகம், 39, 36ஆவது ஒழுங்கை).
vi, (10), 109 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
கொழும்பு, இந்து வித்தியாவிருத்திச் சங்க வைரவிழாவையொட்டி முனைவர் சரசுவதி இராமநாதன் ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவுகளின் தொகுப்பு. விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான், சிவத்தொண்டர் பெருமை, சோதியுள் சோதி, தேடற்கரிய திருவளிக்கும் சிவாய நம, தொண்டரும் தொண்டரும், தாயிற் சிறந்த தயாவான தத்துவன், திருவுருவங்களில் இறைவன், ஆயகலைகள் அறுபத்து நான்கு, அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை (சிவயோக சுவாமிகள்), நாவலர் நமது சைவாகமத்தின் காவலர் ஆகிய 10 தலைப்புகளில் இச்சொற்பொழிவுகள் தொகுக்கப்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 52862).