13251 மாணிக்கவாசக சுவாமிகள் பாடிய திருவாசகம்.

வைத்திலிங்கம் நல்லையா (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: இலங்கைமணி சைவநூற் பதிப்பகம், உயரப்புலம், கொக்குவில், இணை வெளியீடு: குப்பிளான்: ஞானதீப மகளிர் மன்றம், 1வது பதிப்பு, 1976. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).

(8), 192 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.

மாணிக்கவாசக சுவாமிகள் பாடியருளிய திருவாசகத்தில் 51 திருப்பதிகங்கள் உள்ளன. இவற்றுள் மொத்தம் 658 பாடல்கள் அடங்கியுள்ளன. 38 சிவத்தலங்கள் பாடப் பெற்றுள்ளன. சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல் என்னும் நான்கு பெரும் பகுதிகள் இதில் உள்ளன. இவற்றைத் தொடர்ந்து திருச்சதகம் 100 பாடல்களும், நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களையும், திருவெம்பாவை 20 பாடல்களையும், திருவம்மானை 20 பாடல்களையும் கொண்டது. திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரையுள்ள ஆறு பகுதிகள் 20 பாடல்களைக் கொண்டுள்ளன. மற்றவை பத்துப் பாடல்களைக் கொண்ட பதிகங்களாக உள்ளன. இந்நூலில் சிவ புராணம், கீர்த்தித் திரு அகவல், திருவண்டப் பகுதி, போற்றித் திருவகவல், திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை, திருவம்மானை, திருப்பொற் சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தௌ;ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருவுந்தியார், திருத்தோள் நோக்கம், திருப்பொன்னூசல், அன்னைப்பத்து, குயிற்பத்து, திருத்தசாங்கம், திருப்பள்ளியெழுச்சி, கோயில் மூத்த திருப்பதிகம், கோயில் திருப்பதிகம், செத்திலாப் பத்து, அடைக்கலப் பத்து, ஆசைப்பத்து, அதிசயப் பத்து, புணர்ச்சிப் பத்து, வாழாப் பத்து, அருட்பத்து, திருக்கழுக் குன்றப் பதிகம், கண்ட பத்து, பிரார்த்தனைப் பத்து, குழைத்த பத்து, உயிருண்ணிப் பத்து, அச்சப் பத்து, திருப்பாண்டிப் பதிகம், பிடித்த பத்து, திருவேசறவு, திருப்புலம்பல், குலாப்பத்து, அற்புதப் பத்து, சென்னிப் பத்து, திருவார்த்தை, எண்ணப் பதிகம், யாத்திரைப் பத்து, திருப்படை எழுச்சி, திருவெண்பா, பண்டாய நான்மறை, திருப்படையாட்சி, ஆனந்த மாலை, அச்சோ பதிகம் ஆகிய 51 திருப்பதிகங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3011).

ஏனைய பதிவுகள்