பி.முத்துலிங்கம். யாழ்ப்பாணம்: பி.முத்துலிங்கம், இல. 91/8, இந்து மகளிர் ஒழுங்கை, கந்தர்மடம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
xiii, 163 பக்கம், புகைப்படங்கள்;, விலை: ரூபா 300., அளவு: 20 x 14.5 சமீ., ISBN: 978-955-44455-1-2.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி பத்திரிகையில் வெளியானஆசிரியரின் சமூகவியல் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு. 29 கட்டுரைகள் அரசியல், அறிவியல், சமூகம், கல்வி என நான்கு வகைகளின்கீழ் பிரிக்கப்பட்டுள்ளன. அரசியல் பிரிவில் பொதுவுடைமைத் தத்துவம்-தோற்றம், வளர்ச்சி மற்றும் சவால்கள், சுதந்திரப் போராட்டங்களும் தத்துவங்களும், நூற்றாண்டை நோக்கி நகரும் ரஷ்ய ஒக்டோபர் புரட்சி, மேதின அறைகூவல், இலங்கை இந்திய ஒப்பந்தம்-ஒரு மீள்பார்வை, இலங்கைத் தேசியங்களின் வளர்ச்சியும் தோல்விகளும், இலங்கை அரசுகளை ஆட்டம்காண வைத்த கிளர்ச்சிகளும் ஹர்த்தால்களும், புதிய அரசியல் திட்டம் மற்றும் தடைகள், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் வெற்றி மதிப்பீடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் புதிய முரண்பாடுகள், இலங்கைப் பாராளுமன்ற பொதுத் தேர்தலும் மூன்று தலைவர்களும், மகிந்தவின் மீள்வருகையும் அரசியல் குழப்பமும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ: எழுச்சியும் வீழ்ச்சியும் ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அறிவியல் பிரிவில் உலகை மாற்றிய விஞ்ஞானி சார்ள்ஸ் டார்வின், விண்ணியல் விஞ்ஞானி அப்துல் கலாம், உலகை மாற்றிய நியூட்டன், தத்துவ ஞானமும் கணிதமும், தோல்விகளின் சிகரமாக கணிதவியல் மேதை இராமானுஜன், விஞ்ஞானப் புரட்சியாளன் அல்பேர்ட் ஐன்ஸ்டீன் ஆகிய கட்டுரைகளும், சமூகம் என்ற பிரிவில் போர்கள் ஓய்வதில்லை, ஐ.நா.சபை: ஏழு தசாப்த அனுபவங்கள், உலகரீதியாக இன, மத நெருக்கடிகள், பெண்கள் மீதான ஒடுக்குமுறை, போரின் பின் இளைஞரின் வன்முறைகள், யுத்தத்தின் எதிர்மறை விளைவுகள், கிராமங்களில் பொருளாதாரம், கல்வி மற்றும் ஒழுக்கம் ஆகிய கட்டுரைகளும், கல்வி என்ற இறுதிப் பிரிவில் தமிழ் மாணவர்களின் கல்வி நிலை, பாடசாலைகளில் வளமுகாமைத்துவம், வாசிப்பும் மனித மேன்மையும் ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. நூலாசிரியர் பாடசாலை ஆசிரியராக, கல்லூரி அதிபராக, பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பல்வேறு கல்வித் தளங்களிலும் பணியாற்றி ஓய்வுபெற்றவர். (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 15949).