13294 நிவேதினி: பெண்நிலைவாத சஞ்சிகை (மலர் 2, இதழ் 2, மார்கழி 1995).

செல்வி திருச்சந்திரன் (இதழாசிரியர்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, மார்கழி 1995. (கொழும்பு: கருணாரட்ண அன் சன்ஸ்).

114 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 21.5×14 சமீ., ISSN: 1391-0353.

இவ்விதழில், எமது குறிக்கோள்களில் சில (பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம்), இந்த இதழின் உள்ளடக்கம் (ஆசிரியை), எம் குரல்: மானிடராகுங்கள், நாயகரைப் பாடிப் பரவிய நாயகியர் (ராஜம் கிருஷ்ணன்), பெண்களுக்கெதிரான வன்முறைகள் (சந்திரிகா சுப்பிரமணியன்), பெண்ணெனப் பிறந்த மனித உயிரினம் மேன்மை பெற…. (பத்மா சோமகாந்தன்), பெண்களுக்கெதிரான வன்முறைவகைகளும் அவற்றின் தாக்கங்களும் (எஸ். கௌசல்யா), வன்முறையின் இன்னுமொரு கோணம் (செ. கணேசலிங்கம்), பீஷ்மரும் பெண்களும் பற்றிய ஒரு சர்ச்சை, யுகந்தாவிலிருந்து (ஜராவதி கார்வே), குழந்தைகளின் அறிவுத்திறனிலும் ஆளுமையிலும் இரத்த உறவு திருமணங்களின் தாக்கம் (குலவீரசிங்கம் வாசுகி), குவைத்திலிருந்து ஒரு சோகக் கடிதம்……. (றியாத் ரம்ஜான்)

அறிக்கைகள், பால்நிலைப்பாடும் வர்க்க நிலையும், பணிப்பெண்ணைத் தீமூட்டியமை

சமாதானத்துக்காகப் பெண்கள் என்ற அமைப்பின் பிரகடனம், ஆண் பெண் இருபாலர் சமத்துவத்திற்காக, நூல் விமர்சனம் – அடேல் ஆனின் “முறியாத சங்கிலித்தொடர்” யாழ்ப்பாண சீதன முறை பற்றிய ஆய்வு” (செல்வி திருச்சந்திரன்), கலைஞர் கோமல் சுவாமிநாதனுக்கு கண்ணீர் அஞ்சலி ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட படைப்புக்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18559).

ஏனைய பதிவுகள்

Máquinas Tragamonedas

Content ¿la manera sobre cómo Puedo Conseguir Más Referencia De El Rtp Regreso De su Envite De Roma Superior? – 50 giros gratis lucky ladys