13296 நிவேதினி: பால்நிலைக் கற்கைநெறிச் சஞ்சிகை (மலர் 4, இதழ் 2, மார்கழி 1997).

செல்வி திருச்சந்திரன் (இதழாசிரியர்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, மார்கழி 1997. (கொழும்பு: கருணாரட்ண அன் சன்ஸ்).

124 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 21.5×14 சமீ., ISSN: 1391-0353.

இவ்விதழில், எமது குறிக்கோள்களில் சில (பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம்), சில சிதறல்கள்: ஆசிரியரின் உரையாக (செல்வி திருச்சந்திரன்), பால்நிலை, வறுமை, மற்றும் தேசவழமைச் சட்டம் (முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன்), மொழியும் ஆண் வழிச்சமூக அமைப்பும் (செல்வி திருச்சந்திரன்), ஐவரின் தேவி (ராஜம் கிருஷ்ணன்), ரூபவாகினி தமிழ் ஒளிபரப்புகள்: பால்நிலை நோக்கில் ஒரு ஆய்வு (சோமசேகரம் வாசுகி), ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் ஒரு போரும் (வி.சி.பிள்ளை), யாழ்ப்பாண சமூகத்தில் கருத்தியலும் கட்டமைப்புகளும் நிர்ணயிக்கும் பால்நிலைப்பாடு (செல்வி திருச்சந்திரன்), மும்முலை ஆடகசவுந்தரி அல்லது ஆளுமைகளை அடையாளப்படுத்தும் மூன்றாவது முலை (சி. ஜயசங்கர்)ஆகிய கட்டுரைகளும், ஓரினப் பற்கள் (கோகிலா மகேந்திரன்), அக்னி சாட்சி (வத்ஸலா), சிதை ஏறிய சீதையே பேசு (பீனா அகர்வால் – தமிழில்: சில்லையூர் செல்வராசன்) ஆகிய சிறுகதை கவிதை இலக்கியப் படைப்புகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18552).

ஏனைய பதிவுகள்

A beginners Deuces Wild Approach

Articles The Better Gambling enterprises to own Electronic poker Video game inside the February, 2025 Jacks or Greatest, Bonus Web based poker, Deuces Insane Extra