திருச்செல்வம் தவரத்தினம். காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2014. (யாழ்ப்பாணம்: றூபன் பிறின்ரேர்ஸ், ஆனைக்கோட்டை).
(6), 93 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 220., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-44445-2-2.
இந்நூல் நீருயிர் வளம் பற்றி விளக்கும் வகையில் நீர்வளம், உள்நாட்டு நீர்நிலைசார் வளங்கள், கடல்வளம், நீருயிர் வளர்ப்பு, உயிர் பல்வகைமை, இளநிலைகளைப் பாதுகாத்தலும் வளர்ப்புத் திட்டமும் ஆகிய ஐந்து இயல்களில் எழுதப்பட்டுள்ளது. பாடசாலை மட்டத்தில கடல்வளமானது ஒரு தொழில்நுட்பக் கற்கை நெறியாக இடம்பெற்றிருப்பதால் இந்நூலின் தேவை அவசியமாகியுள்ளது. வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, மற்றும் இளைஞர் விவகார அமைச்சு 24.10.2015இல் கிளிநொச்சியில் நடாத்திய வடக்கு மாகாண இலக்கியப் பெருவிழாவில் 2014இல் வடக்கு மாகாணத்தில் வெளிவந்த சிறந்த அறிவியல் நூலுக்கான பரிசை வென்ற நூல்.