13351 அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைமுறை- 2வது கட்டம்: அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஒரு வழிகாட்டி: அடிப்படைக் கோட்பாடுகளும் குறுக்கிடும் பேசுபொருள்களும்.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம். கொழும்பு 5: மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், 6/5, லெயார்ட்ஸ் வீதி,  1வது பதிப்பு, பெப்ரவரி 2016. (கொழும்பு: குளோப் பிரின்டிங் வேர்க்ஸ்).

72 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4746-67-1.

பொது மக்களின் கொள்கை தொடர்பான சம்பாஷனைக்கு சிவில் சமூகத்தின் நேரடி ஒத்துழைப்பு தேவைப்படுவதாலும், அதைப் பலப்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக மிகுந்த நம்பிக்கை காரணமாகவும், 1996இல் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் அமைக்கப்பட்டது. பொதுமக்கள் மீதான கொள்கைகள் விமர்சன ரீதியாக திறனாய்வு செய்யப்படல் மாற்று வழிகளை இனம்காணல், அதை விரிவாக்கல் தொடர்பான ஆய்வு, அழுத்தம் கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டங்கள் என்பவற்றிற்கு மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் தன்னை அர்ப்பணித்துச் செயற்படுகின்றது. அவ்வகையில் இலங்கைக்கான அரசியலமைப்பொன்றை வகுத்தல் பற்றி உலகளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட ஆய்வுகளுக்குப் பின்னர் இத்தொடர் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் சுன்னாகம்; பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24846). 

ஏனைய பதிவுகள்