பாலசிங்கம் ஸ்கந்தகுமார். கொழும்பு 8: சட்டத்திற்கும் சமூகத்திற்குமான அறநிலையம், இல. 3, கின்சி டெரஸ், 1வது பதிப்பு, 2008. (கொஸ்வத்தை: இம்பிரஷன்ஸ் பிறின்டேர்ஸ் நிறுவனம், 128/2, சூரியா மாவத்தை, தலங்கம).
xv, 208 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-1302-18-4.
பகுதி ஒன்றில் ‘தமிழ் ஒரு அரசகரும மொழியாக’ என்ற தலைப்பில் ஆரம்ப உரை (D.E.W.குணசேகர), மொழியுரிமைகள் பற்றிய யதார்த்த நிலையை அறிதலும் பரிந்துரைகளும் (என்.செல்வக்குமாரன்), அரச சேவையில் இருமொழித்தன்மை (ராஜா கொலூரே), மொழியுரிமைகளை நடைமுறைப்படுத்துவதில் சிவில் சமூகத்தின் பங்கு (குமார் ரூபசிங்க), சிறுபான்மையினருக்கான மொழிக் கொள்கையும் உரிமைகளும்: தமிழர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும்? (பா.ஸ்கந்தகுமார்) ஆகிய ஐந்து கட்டுரைகளையும், பகுதி இரண்டில் இலங்கை அரசியலமைப்பு அரசசபைக் கட்டளை-1946: பிரிவு 29, அரசகரும மொழிச் சட்டம் இல. 33: 1956, பாண்டா-செல்வா ஒப்பந்தம் 1957, தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்ட இல.28-1958, சேனநாயக்க- செல்வநாயகம் ஒப்பந்தம் 1965, தமிழ் மொழி (விசேட ஏற்பாடுகள்) ஒழுங்கு விதிகள்-1966, இலங்கை அரசியலமைப்பு 1972 அத்தியாயம் 3, இலங்கை அரசியலமைப்பு 1978 அத்தியாயம் 3 மற்றும் அத்தியாயம் 4, இலங்கை அரசியலமைப்பிற்கான 13ஆவது திருத்தம்-1987: உறுப்புரை 2, இலங்கை அரசியலமைப்பிற்கான 16ஆவது திருத்தம்-1988: உறுப்புரைகள் 2-5, அரசகரும மொழிகள் ஆணைக்குழுச் சட்டம் இல. 18-1991, பொது நிர்வாகச் சுற்றறிக்கை இல. 03/2007, பொது நிர்வாகச் சுற்றறிக்கை இல. 07/2007, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச பொருத்தனை-1966: உறுப்புரைகள் 2,14,26 மற்றும் 27, தேசிய அல்லது இன, மத, மற்றும் மொழிரீதியிலான சிறுபான்மையினரைச் சேர்ந்த நபர்களின் உரிமைகள் மீதான பிரகடனம் 1992, பிரதேச அல்லது சிறுபான்மையினர் மொழிகளுக்கான ஐரோப்பிய பட்டயம்-1992 ஆகிய 16 பின்னிணைப்புகளையும், பகுதி 3 இல் முறைப்பாடுகள் என்ற தலைப்பில் தொடர்புகொள்ளும் தகவல்களையும் இந்நூல் கொண்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 210087).