13377 வீட்டில் கற்றல் சந்தர்ப்பங்கள்-2 (வயது 1 முதல் 3 வரை).

சிறுவர் செயலகம். கொழும்பு: யுனிசெப் சிறுவர் பாதுகாப்பு, ஸ்ரீலங்கா, இணை வெளியீடு, கொழும்பு: மகளிர்; விவகார அமைச்சு, 2வது பதிப்பு, 2005, 1வது பதிப்பு, ஜுன் 2001. (கொழும்பு: அச்சக விபரம்  தரப்படவில்லை).

63 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

சிறுவர் உரிமைகள் பாதுகாப்பிற்கான ஆரம்பப் படிகளை அவர்களது குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பித்தல் வேண்டும் என்ற அடிப்படையில் வெளியிடப்பெற்ற முன்னைய நூலுக்கு மேலதிகமாக பெற்றோரினதும் குழந்தைப் பராமரிப்பாளரினதும் நன்மை கருதி, குழந்தையின் விருத்திக்காக வீட்டுப் பின்னணியை ஒழுங்கமைத்தல் என்ற தலைப்பில் இந்நூலை மகளிர் விவகார அமைச்சு வெளியிட்டுள்ளது. சுகாதாரமும் போசணையும் தொடர்பாக குழந்தையின் உள சமூக விருத்தி தொடர்பான விடயங்களை ஒன்றுதிரட்டி இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. உங்கள் குழந்தை, சுகாதாரம்- உணவு-போசணை-பாதுகாப்பு, குழந்தை விருத்திக்குத் தேவையான பின்னணியை வீட்டில் ஏற்படுத்தல், வீட்டில் கற்கும் சந்தர்ப்பங்கள், விளையாடுதல் ஆகிய ஐந்து பிரிவுகளை இ;ந்நூல் உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் சுன்னாகம்; பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16189). 

ஏனைய பதிவுகள்