13384 கல்வியின் அண்மைக்காலப் போக்குகள்.

மா.சின்னத்தம்பி. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

(6), 135 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-617-5.

கல்விச் செயற்பாடுகள் நிகழ்கின்ற பாடசாலைகளின் முனைப்பும், தொலைநோக்கும், செயற்பாடுகளும் சமுதாய மாற்றத்தை நோக்கியதாக அமையும்போது மாத்திரமே வளர்ச்சியுடன், சமத்துவமும், சமுதாய நீதியும் வளர்வது சாத்தியமாகின்றது. பாடசாலைகளின் விசையும் தொழிற்பாடும் ஆசிரியர்களின் செயலாற்றுத் திறன்களில் தங்கியுள்ளன. சமுதாய மாற்றம் பாடசாலைகளினாலும், ஆசிரியர் செயலாற்றத்தின் தரத்தினாலும் நிர்ணயிக்கப்படுகின்றது. இந்த வகையில் சமூகநீதி நோக்கிய சமூக மாற்றங்கள் தேவை என்பதனை இந்நூலிலுள்ள பெற்றோர்களும் பிள்ளைகளின் கல்வியும், பெற்றோரும் பாடசாலைகளும், பாடசாலைக் கல்விக்கும் தொழில் உலகுக்குமான முரண்பாடுகள், பாடசாலைகளில் வெற்றியையும் சமநிலையையும் உறுதிப்படுத்துதல், தகைமைகளும் தொழில்புரியும் திறன்களும், ஆசிரியர்களது நேர முகாமைத்துவம், பாடசாலை மட்டத்தில் அணிகளை முகாமைத்துவம் செய்தல், கல்வி-வேலை மற்றும் தொழில் வழிகாட்டல், தொழில்நுட்பக் கல்விக்கு உயர்கல்விச் சான்றளித்தல், பாடசாலைகளின் கதவுகளை அகலத்திறந்து விடுதல், முன்பள்ளிகளை ஒழுங்கமைத்தல், இலங்கையில் பிரத்தியேக கல்வி, உயர்கல்வியும் பட்டதாரிகளும், உலகமயமாதலில் கல்விசார் திறன்களும் தகைமைகளும் ஆகிய பதினான்கு அத்தியாயங்களும் வலியுறுத்துகின்றன.

ஏனைய பதிவுகள்