எஸ்.சிவலிங்கராசா. கொழும்பு: யா/வேலாயுதம் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2010. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48B, புளுமெண்டால் வீதி).
(24) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
தமிழின் நீண்ட கவிதைப் பாரம்பரியத்தில் ஒருவகை வெளிப்பாடாக அரை வாய்மொழிப் பாடல்கள் அமைந்துள்ளன. அச்சு ஊடகத்திலிருந்து வாய்மொழிக்கும், வாய்மொழியிலிருந்து அச்சு ஊடகத்துக்கும் பரஸ்பரம் மாற்றமடைந்து வந்த இர்ப்பாடல்கள் சமூகப் பிரக்ஞையுடன் தோற்றம்பெற்று வந்ததோடு உயர் இலக்கியங்கள் சொல்லாத சேதிகளையும் சொல்லிவந்தன. பேச்சு வழக்குச் சொற்கள், பிறமொழிச் சொற்கலப்புடன் காணப்பட்டாலும் சாதாரண மக்களுக்கு உணர்வூட்டுவதோடு அறிவூட்டுவதாகவும் இப்பாடல்கள் அமைந்திருந்தன. மண்டைதீவு பண்ணைப்பாலக் கும்மி, தற்கால நாகரீக வேடிக்கைப் பாடல்கள், அழகம்மா திருமண அலங்கோலக் கும்மி, சேனாதிராசா கொலை விசித்திரக் கவிகள், பனைப்பாட்டு அல்லது தாலபுரத்தார் கீதம், அல்பிரட் துரையப்பா ஒப்பாரிப் பாடல் போன்றவை இத்தகைய பாடல்களுக்கான சில உதாரணங்களாகும். பருத்தித்துறை யா/வேலாயுதம் மகாவித்தியாலய நிறுவுனர் தினப் பேருரையாக 07.08.2010 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் ஆற்றிய நினைவுப் பேருரை. பேராசிரியர் கலாநிதி எஸ்.சிவலிங்கராசா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் Pam-2570).