நா.சிவபாதசுந்தரன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா நூற்பதிப்பகம், 1வது பதிப்பு, 1955. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம்).
(8), 104 பக்கம், விலை: ரூபா 1.25, அளவு: 22×14 சமீ.
தெல்லிப்பழை மஹாஜனக் கல்லூரியின் ஆசிரியரான புலவர் நா.சிவபாதசுந்தரனார் உயர்தர வகுப்பு மாணவர்களின் தமிழ்மொழித் தேர்ச்சிக்காகத் தொகுத்துள்ள இந்நூல், செய்யுட் பகுதி, கட்டுரைப்பகுதி என இரு பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. செய்யுட் பகுதியில் தோத்திரமாலை (கடவுள் வாழ்த்து, தமிழ்த்தாய் வாழ்த்து), நீதி (தமிழிசை, தமிழ்நூல் கற்கும் முறை, பெற்றோரைப் பேணல், உயிர்களுக்கிரங்கல், அறநெறி வித்து), கதைப்போக்கு (சகோதர வாஞ்சை, பாஞ்சாலி மாலையீடு, குசேலர் கண்ணனிடம் போதல், தேவர் தூது), பழமையும் புதுமையும் (பழமை, புதுமை) ஆகிய செய்யுட் பாடங்களும், கட்டுரைப் பகுதியில் இலக்கண வரம்பு (சி.கணேசையர்), சங்ககாலத் தெய்வ வழிபாடு (சுவாமி விபுலானந்தர்), தருமம் (சி.கணபதிப்பிள்ளை), வீரம் (வி.கலியாணசுந்தரனார்), அனுமனும் சீதையும் (இலக்குமணன்), வள்ளுவர் கண்ட குடியரசு நெறி (தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்), தமிழ்நாடு கண்ட அரசியல் (கா.பொ.இரத்தினம்), அழிந்த கண் (கி.வா.ஜகநாதன்), அமிர்தம் தேடுதல் (சி.சுப்பிரமணிய பாரதியார்), பொன் காத்த கிழவி (உ.வே.சாமிநாதையர்) ஆகிய பத்துக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14521).