த.சண்முகசுந்தரம். தெல்லிப்பழை: அருள் வெளியீட்டகம், மாவை கந்தசாமி கோவிலடி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1982. (தெல்லிப்பளை: குகன் அச்சகம்).
42 பக்கம், விலை: ரூபா 6.00, அளவு: 18×12 சமீ.
இந்நூலில் நாதசுரம், தவில் ஆகிய இசைக் கலைகளின் பழைய புதிய நிலைகள் பற்றியும் அவற்றின் வரலாற்றுப் பெருமை பற்றியும் ஆசிரியர் மிக விரிவாகக் கூறியிருக்கின்றார். அவற்றைக் கையாண்டு மேதாவிகளாக விளங்கிய அக்காலத்தைய கலைஞர்களுடைய விபரங்களையும் ஆங்காங்கே தந்திருக்கின்றார். ஆரம்பத்தில் கோவில்களில் இறைவனை நித்திய பூசைகளிலும் விழாக்காலங்களிலும் சேவிக்கும் ஒரு வாத்தியமாகக் கருதப்பட்ட தவில் நாதஸ்வரம் என்பன காலப்போக்கில் மங்கல வாத்தியமாக திருமணங்களிலும் பிற சமூக வைபவங்களிலும் உபயோகிக்கப்பட்ட சமூக வரலாறு இந்நூலில் விரிந்துள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 114844CC).