ஜெ.கீதாஞ்சலி. மட்டக்களப்பு: திருமதி ஜெ.கீதாஞ்சலி, நடன ஆசிரியை, மட்டக்களப்பு இந்துக் கல்லூரி, 227/A, பழைய கல்முனை வீதி, நாவற்குடா, 1வது பதிப்பு, 2018. (தமிழ்நாடு: லக்ஷா கொம்பியூட்டர்ஸ், அண்ணாமலைநகர், சிதம்பரம்).
92 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 20×14 சமீ.
பரதம்-அன்றும் இன்றும், காலங்களில் கலைகள், பரதமும் ஆரோக்கியமும், பரதமும் ஆளுமை வளர்ச்சியும், தமிழ் இலக்கியத்தில் நாட்டியம், ஸ்ரீ நடராஜப் பெருமானின் 108 தாண்டவங்கள் எனஆறு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சிந்துவெளி காலகட்டத்திலிருந்து மராத்திய காலகட்டம் வரையில் கலைகளின் வளர்ச்சிப்போக்கினை காலங்களில் கலைகள் என்ற கட்டுரை எடுத்துக்காட்டுகின்றது. பரதமும் ஆரோக்கியமும் என்ற கட்டுரையில் உடல்ஆரோக்கியத்திற்கு ஆடலும் அசைவும் எவ்வாறு உதவுகின்றன என்பதை ஆசிரியர் விளக்கியுள்ளார். பரதத்தினூடாக மனிதனிடம் எவ்வாறு ஆளுமை வளர்க்கப்படுகின்றது என்பதை பரதமும் ஆளுமை வளர்ச்சியும் என்ற கட்டுரை விளக்குகின்றது. சிலப்பதிகாரத்தை மையமாகவைத்து, தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கும், அதன் பிரதிபலிப்புக்கும் நடனக்கலை எவ்வாறு பங்களிக்கின்றது என்பதை தமிழ் இலக்கியத்தில் நாட்டியம் என்ற கட்டுரை விளக்குகின்றது. இறுதி இயலில் நடராஜப் பெஐமானின் 108 தாண்டவங்கள் பற்றிய புகைப்பட விளக்கம் தரப்பட்டுள்ளது. 66ஆவது பக்கம் முதல் 92ஆம் பக்கம் வரையில் இத்தாண்டவம் பற்றிய புகைப்பட விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. நூலாசிரியர் நாவற்குடாவில் இயங்கும் நர்த்தன கலாலயத்தின் இயக்குநரும், சிதம்பரம் சிவாலயா நாட்டியப்பள்ளியின் இயக்குநருமாவார். (இந்நூல் சுன்னாகம்; பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24912).