ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1995. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், குருநகர்).
52 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 20.00, அளவு: 20.5×15 சமீ.
திருமறைக் கலாமன்றத்தினரின் நாடக அரங்கவியல் காலாண்டு இதழ். இதன் முதலாவது இதழ் 1994ஆம் ஆண்டு ஐப்பசி-மார்கழி இதழாக வெளிவந்தது. இவ்விதழில்,வெளியீடும் உணர்ந்துகொள்ளலின் அவசியமும் (ஆசிரியர் குழு), கிரேக்க அரங்கம் : கருத்தும் களமும் (குழந்தை ம. சண்முகலிங்கம்), கலைகளால் நல்ல உறவை வளர்க்க முடியும் – திருமதி சோமலதா சுபசிங்ஹாவுடன் நேர்காணல், நூல் நுகர்வு : அன்றில் பறவைகள் (நா.விமலாம்பிகை), ஈழத்தின் நவீன நாடகத்தின் தோற்றம்: பேசப்படாத மறுபாதி – சரஸ்வதி விலாச சபை (பா. அகிலன்), விமர்சனம் : அண்டவெளி (பு.வதனன்), நீங்கா நாடக நினைவுகள் : ஒரு இனிய நண்பனைப் பற்றி (நா.சுந்தரலிங்கம்), நிகழ்வும் பதிவும் (ம.போ.ரவி, கி.செல்மா எமில்), ஆற்றுகை அறிவுப் போட்டி ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 19302).