13553 ஆற்றுகை-நாடக அரங்கியலுக்கான இதழ்: களம் 1, காட்சி 3-4, ஏப்ரல்-செப்டெம்பர் 1995.

ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1995. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், குருநகர்).

67 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 25.00, அளவு: 20.5×14.5 சமீ.

திருமறைக் கலாமன்றத்தினரின் நாடக அரங்கவியல் காலாண்டு இதழ். இவ்விதழில்,அரங்கின் வளர்ச்சித் தேவையும் நோக்குதலும் (ஆசிரியர் குழு), கிரேக்க அவலம் சுவைத்த அவலச் சுவை (குழந்தை ம.சண்முகலிங்கம்), நாடக நெறியாளர் (கந்தையா ஸ்ரீகந்தவேள்), நூல் நுகர்வு: இம்மனுவல் நாட்டுக்கூத்து (எமிலியானுஸ் எல்விஸ்), வீதி நாடகம் ஒரு அறிமுகம் (சி.மௌனகுரு), நாடகம்: ‘அகதிகளின் கதை’ (ம.நிலாந்தன்), அரங்கியல் கண்காட்சி ஒரு பார்வை (இராவளனன்), ‘என்னுடைய வாழ்க்கை என்னுடைய தெரிவாக இருந்ததில்லை- எஸ்.ரி.அரசுடன் நேர்காணல் (பா.அகிலன்), விமர்சனம்: அவள் ஒரு மாதிரி (ஜி.வதனன்), தேடுங்கள் கண்டடைவீர்கள் (போட்டி முடிவுகள்), நெஞ்சில் நிறைந்தவர் – (வை.மா.அருட்சந்திரன்), நிகழ்வும் பதிவும் (கி.செல்மர் எமில்), பாஸ்கா நாடகங்கள், ஆற்றுகை அறிவுப் போட்டிகள் ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 007603).

ஏனைய பதிவுகள்