ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1997. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், மவுன்ட் கார்மேல் வீதி, குருநகர்).
52 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 25.00, அளவு: 20.5×15 சமீ.
திருமறைக் கலாமன்றத்தினரின் நாடக அரங்கவியல் காலாண்டு இதழ். இவ்விதழில், தேடலும் வெளியீடும் (ஆசிரியர் குழு), அரங்க நோக்கில் வேட்டுவ வரி (என்.நவதர்சினி), புதைக்கப்பட்டவன் நான்-தார்சீசியஸீடன் நேர்காணல் (மு.புஷ்பராஜன்), பாரம்பரிய கலைகளில் ஒரு பொக்கிசம்-கலாவினோதன் சின்னமணியின் மணிவிழாவையொட்டிய சிறு குறிப்பு (பா.இரகுவரன்), குரலசைவே உடலசைவாக: இசை நாடக அரங்கியலுக்கான திறப்புரை (பா.அகிலன்), சிங்கள அரங்கின் பிதாமகர்: பேராசிரியர் எதிர்வீர சரத்சந்திர (ஜே.ஜே.ராஜ்குமார்), நிகழ்வும் பதிவும் (யே.இக்னேஷியஸ்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 018429).