மலர்விழி ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (மட்டக்களப்பு: ஓ.கே.பாக்கியநாதன் அறிஞர் சோலை).
26 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 600., அளவு: 20×22 சமீ., ISBN: 978-955-7654-07-2.
பசியோடு அலைந்து திரிந்த ஒரு நாய்க்குட்டி, பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சிகள் இங்கே சுவையான கதையாகச் சொல்லப்படுகின்றது. இந்நூலுக்கான சித்திரங்களை த.தனபாலன் வரைந்துள்ளார். இந்நூல் 95ஆவது பிரியா பிரசுரமாக வெளிவந்துள்ளது. மலர்விழி ஓ.கே.குணநாதன், எழுத்தாளர் ஓ.கே.குணநாதன் அவர்களின் துணைவியாராவார்.