ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2016. (மட்டக்களப்பு: ஓ.கே.பாக்கியநாதன் அறிஞர் சோலை).
28 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 600., அளவு: 20.5×22.5 சமீ., ISBN: 978-955-8715-92-5.
இலங்கை மக்கள் வங்கியினால் 2016ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட சிறுவர் தின விழாவின்போது சிறப்பம்சமாக ஓ.கே.குணநாதன் எழுதிய இச்சிறுவர் கதை நூலுக்கான அனுசரணை வழங்கி வெளியிடப்பட்டது. டெங்கு பற்றிய விழிப்புணர்வினை ஊட்டும் வகையில் இந்நூலின் கதை அமைந்துள்ளது. சூழலைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்ற அறிவுரையை இக்கதை சிறுவர்களுக்கு வழங்குகின்றது. இந்நூலுக்கான சித்திரங்களை த.தனபாலன் வரைந்துள்ளார். இந்நூல் 94ஆவது பிரியா பிரசுரமாக வெளிவந்துள்ளது.