13623 எறும்பு வீரன்.

த.மக்காரவா (ரஷ்ய மூலம்), பூ.சோமசுந்தரம் (தமிழாக்கம்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

20 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 195., அளவு: 29.5×21.5 சமீ., ISBN: 978-955-1997-71-7.

மொஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் முன்னர் வெளியிட்டிருந்த இச்சிறுவர் கதை நூலுக்கான ஓவியங்களை கென்னாதி பவ்லீஷின் என்ற ரஷ்ய ஓவியர் வரைந்துள்ளார். சித்தன் எறும்பு ஒரு நாள் இரைதேடத் தன் குடும்பத்துடன் வெளியே சென்று மாலை திரும்பிய வேளை 20 குடும்பங்களைக் கொண்ட தன்கூட்டுக் குடும்பம் சடுதியாக இடம்பெயர்ந்துவிட்டதைக் கண்டு கவலை கொள்கிறது. தாம் புறப்படும் முன்னல் கொசுவிடம் தகவல் சொல்லியிருந்த போதிலும் கபடம் நிறைந்த கொசு அதனை சித்தனிடமிருந்து மறைத்து  ஏமாற்றுகிறது. சித்தன் மனம் தளராமல் தனக்கெனவொரு தகரடப்பாவில் இருப்பிடத்தைத் தேடிக்கொள்கிறது. தனது புதிய இல்லத்தை மகிழ்வானதாக்கி அன்றிரவு மற்றவர்களுக்கும் விருந்து படைக்கின்றது. விருந்தின் நடுவே மழை வந்து சுற்றிலும் நீர் நிறைந்தபோதிலும் நம்பிக்கையுடன் தன் தகர டப்பாவில் தன் குடும்பத்துடன் நீந்திச்; செல்கின்றது. கஷ்டம் வந்துற்றபோதிலும் துணிச்சலுடன் குடும்பத்தை வழிநடத்தும் எறும்பு வீரனாகின்றது சித்தன். இந்நூல் 073ஆவது இலக்கியன் வெளியீடாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Weird Bunny Banana Funciona online

Content Aloha cluster pays casino | Nuestro Intención Favorito para Juegos Multidispositivos Big Bass Splash Atributos Código promocional Chaskibet: MAXDEPOR Obtén hasta 300% sobre bono